சிறிது தினங்களுக்கு முன் பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயலாளர் கே.டி.ராகவன் பற்றிய ஆபாச வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.  இந்த வீடியோவை பிஜேபி கட்சியை சேர்ந்தவர் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டார்.  இதற்கு மறுப்பு தெரிவித்த கே.டி.ராகவன் என்னை பற்றி கட்சியிலும், சுற்றியுள்ளவர்களுக்கும் தெரியும், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.  அதன்பின் கட்சியிலிருந்து தனது பொறுப்பை ராஜினாமா செய்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதன்பின் வீடியோவை வெளியிட்ட பாஜக நிர்வாகி மற்றும் அவருடன் இருந்த பெண்ணும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர், கே.டி.ராகவன் பற்றி வெளிவந்த யூடியூப் வலைதளமும் முடக்கப்பட்டது.   அதற்கு மறுநாள்,  வீடியோ வெளியிட்ட பாஜக நிர்வாகி மற்றும் தலைவர் அண்ணாமலை பேசும் ஆடியோவும் வெளியாகி சர்ச்சைகளும் வெடித்தது.


இந்நிலையில் கே.டி.ராகவனுக்கு ஆதரவாக சீமான் பேசியுள்ளார்.  சென்னை வளசரவாக்கம்  பகுதியில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகமான ராவணன் குடிலில் ' மாயோன் பெருவிழா' நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மாயோன் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,  ஒருவரின் அனுமதி , ஒப்புதல் இல்லாமல் படம் பிடிப்பது சமூக குற்றம்.  உலகில்  நடக்காததையா கே.டி.ராகவன் செய்துவிட்டார் என்றும், அவரது பேச்சை படம் பிடித்த நபரை தான் கைது செய்ய வேண்டும் எனவும் சீமான் ஆவேசம் பொங்க பேசினார். யார் யாரோடு பேசுகிறார்கள் என்பதை ஓட்டு கேட்டு என சாதிக்க போகிறோம் என்றும் கூறினார். சீமானின் இந்த பேச்சு தற்போது சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


ALSO READ வேளாண் சட்டத்திற்கு எதிரான தீர்மானம் கண்துடைப்பு நாடகம் -அண்ணாமலை விமர்சனம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR