வேளாண் சட்டத்திற்கு எதிரான தீர்மானம் கண்துடைப்பு நாடகம் -அண்ணாமலை விமர்சனம்

வேளாண் சட்டத்திற்கு எதிரான தீர்மானம் என்பது அறிவாலயத்தின் கண்துடைப்பு நாடகம் என அண்ணாமலை பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம்

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 28, 2021, 03:47 PM IST
  • மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம்.
  • தி.மு.க தீர்மானம் நிறைவேற்றியிருப்பது கண்துடைப்பு நாடகம்.
  • தமிழக விவசாயிகள் எவரும் இந்தச் சட்டங்களை எதிர்க்கவில்லை.
வேளாண் சட்டத்திற்கு எதிரான தீர்மானம் கண்துடைப்பு நாடகம் -அண்ணாமலை விமர்சனம் title=

சென்னை: வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டப் பேரவையில் தி.மு.க (DMK) தீர்மானம் நிறைவேற்றியிருப்பது அறிவாலயத்தின் கண்துடைப்பு நாடகம் என்று பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை (Annamalai) பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர். ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள இந்த சட்டமானது விவசாயிகள் விளைவிக்கக்கூடிய பொருட்களையும், நிலங்களையும் கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கும் படியாக அமைந்துவிடும் என திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

திமுகவும் தனது தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் எனக்கூறியது.

அதற்குச் சான்றாக இன்று தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் (M.K.Stalin) சட்டப்பேரவையில் மூன்று வேளாண் சட்டத்திற்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றினார். இதற்கு ஆதரவு தெரிவித்து காங்கிரஸ், பாமக, மதிமுக, விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஒருமனதாக இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால் அதிமுகவும், பாஜகவும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்துள்ளனர்.

ALSO READ | விவசாய சட்டங்களின் நகல்களை எரித்து "ஹோலி" கொண்டாடும் விவ்சாயிகள்

இந்நிலையில் இது குறித்து பாஜக (BJP) மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், மத்திய அரசின் மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக சட்டப் பேரவையில் திமுக அரசு தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்எல்ஏக்கள் இன்று வெளிநடப்பு செய்துள்ளனர்.

தமிழக விவசாயிகள் எவரும் இந்தச் சட்டங்களை எதிர்க்காத போது, உண்மையில் அவர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கும் போது தமிழக மக்களுக்கு இது வெறும் அறிவாலயத்தின் கண்துடைப்பு நாடகம் என்று தெரியும் என அண்ணாமலை தனது ட்விட்டர் (Twitter) பக்கத்தில் விமர்சித்துள்ளார்.

ALSO READ | சட்டசபையில் வேளாண் சட்ட நகலை கிழித்த கேஜ்ரிவாலுக்கு எதிராக பாஜக போலீஸில் புகார்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News