இந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கான வாய்ப்பு: பள்ளிகளுக்கு விடுமுறை
வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக, வரும் வாரம் தமிழகத்தில் இயல்பை விட அதிக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 13 ஆம் தேதி வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நேற்று, சென்னை மற்றும் புதுச்சேரிக்கு இடையே கரையை கடந்தது. நேற்று அதிகாலை சுமார் 5:30 மணியளவில் இந்த தாழ்வு மண்டலம் முழுமையாக கரையை கடந்தது.
இந்த விளைவாக, தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று முதல் வரும் 23 ஆம் தெதி வரை தமிழகத்தின் (Tamil Nadu) பல பகுதிகளில் நல்ல மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
6 மாவட்டங்களில் கனமழை பெய்யும்
நேற்று கரையை கடந்த தாழ்வு மண்டலம், தாழ்வு பக்தியாக வலு குறைந்துள்ளது. இது, தெற்கு ஆந்திரா மற்றும் தமிழகத்தின் பகுதிகளில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சியாக நிலவி வருகிறது. இதன் விளைவாக அரியலூர், பெரம்பலூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், நீலகிரி ஆகிய 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்லது. தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.
ALSO READ:பாலாற்றின் கரையோரம் உள்ள வீடு வெள்ளத்தால் அடித்து செல்லும் காட்சி!
பள்ளிகளுக்கு விடுமுறை
தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்றும் கனமழைக்கான (Rain) வாய்ப்பு உள்ளதால், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், விழுப்புரம்,கள்ளக்குறிச்சி ஆகிய 6 மாவட்டங்களின் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (சனிக்கிழமை) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறை தொடர்பான அறிவிப்பை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டனர்.
மிதமான மழை இருக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ள சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மற்றும் கடலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை (Chennai) பொறுத்தவரையில், இன்று லேசான மழைக்கான வாய்ப்புண்டு. வானம் லேசான மேக மூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
வரும் நாட்களில் மழை அதிகரிக்கும்
வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக, வரும் வாரம் தமிழகத்தில் இயல்பை விட அதிக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ALSO READ:இந்த மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: IMD
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR