ராஜேந்திர பாலாஜி மீது கொலை முயற்சி குற்றச்சாட்டும் உள்ளது - காவல்துறை

பண மோசடி மட்டுமில்லை, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது கொலை முயற்சி வழக்கும்  உள்ளது என போலீசார் குற்றம்சாட்டி உள்ளனர்.  

Written by - ZEE Bureau | Last Updated : Nov 19, 2021, 09:57 PM IST
ராஜேந்திர பாலாஜி மீது கொலை முயற்சி குற்றச்சாட்டும் உள்ளது - காவல்துறை

சென்னை :அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக புகார் இருந்த நிலையில், தற்போது இவர் கொலை முயற்சி புகார் ஒன்று இருப்பது தெரிய வந்துள்ளது.  

ALSO READ கழுத்தில் மாட்டிய தையல் ஊசி! திறமையாக செயல்பட்ட மருத்துவர்கள்!

கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறையில் அமைச்சராக செயல்பட்டவர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.  இவர் ஆவினில் வேலை வாங்கி தருவதாக கூறி கோடிகணக்கில்  பணமோசடி செய்துள்ளார்.  இவர் விருதுநகரை சேர்ந்த விஜயநல்லதம்பி என்பவரிடம் பணம் கொடுத்தால் வேலை வாங்கி தருகிறேன் என்று கூறியுள்ளார்.

அதனையடுத்து அவரும் பலரிடம் இதுபற்றி கூறியிருக்கிறார், அரசு வேலை என்பதால் பலரும் ஆசையில் பணத்தை கொடுத்து விட்டனர்.  கிட்டத்தட்ட 3 கோடி ரூபாயை அரசு வேலைக்காக நல்லதம்பி முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் கொடுத்திருக்கிறார்.  ஆனால் அவர் வேலையும் வாங்கி தரவில்லை, கொடுத்த பணத்தையும் திருப்பி தரவில்லை.  இந்நிலையில் அவர் ராஜேந்திர பாலாஜி மீது மோசடி புகார் கொடுத்தார்.  மேலும் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் விருதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.  உடனே முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனுவை தாக்கல் செய்தார்.  அந்த மனு தொடர்பான வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

rajendrabalaji

அப்போது நீதிமன்றத்தில் ஆஜரான போலீசார், ராஜேந்திர பாலாஜி மீது மேலும் ஒரு குற்றச்சாற்றை வைத்தனர்.  அதாவது முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது பண மோசடி புகார் மட்டும் எழவில்லை, அவர் மீது ஏற்கனவே ஒரு கொலை முயற்சி குற்றமும் இருக்கிறது என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  அதனையடுத்து ராஜேந்திரபாலாஜிக்கு எதிராக போலீசார் கைது செய்வது போன்ற நடவடிக்கைகளை எடுக்க கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது.

ALSO READ 48 மணி நேரத்திற்கான அவசர சிகிச்சை செலவை அரசே ஏற்கும் - மு.க.ஸ்டாலின்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News