சென்னை: திமுக குழு துணைத் தலைவரும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான கனிமொழி (Kanimozhi) அவர்கள் டெல்லிக்கு விமான மூலம் பயணம் மேற்கொள்ள சென்ற போது விமான  நிலையத்தில், தனக்கு இந்தி தெரியாது என்பதால் ஆங்கிலம் அல்லது தமிழ் மொழியில் பேச முடியுமா என கேட்டதற்கு,  ‘நீங்கள் இந்தியரா?’ என்று பாதுகாப்பில் இருந்த CISF வீரர் ஒருவர் என்னிடம் கேள்வி எழுப்பியதாகவும், இந்தி மொழி தெரிந்தால்தான் இந்தியர் என்ற நிலை எப்போது உருவானது என்பதை அறிய விரும்புகிறேன் எனவும் ட்விட்டரில்  குறிப்பிட்டார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இத விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. எப்பொழுதும் இந்தி மொழிக்கு முன்னுரிமை அளிக்கும் முயற்சியில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. அதேபோல திமுகவை பொறுத்த வரை தமிழகத்தில் இந்தி திணிப்பு (Hindi Imposition) என்ற பேச்சுக்கே இடமில்லை என்று இந்தி திணிப்புக்கு எதிராக செயல்பட்டு வரும் கட்சியாகும். 


ALSO READ |  இந்தியை ஏற்காதார் இந்தியாவை ஏற்காதவர்கள் -பிப்லப் குமார்!


ஏற்கனவே மும்மொழி கொள்கைக்கு எதிராக திமுக உட்பட பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் வேளையில், இந்தி தெரிந்தால் தான் இந்தியரா? என்ற விவாதம் அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.


இந்தநிலையில், இந்த விவகாரம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், கருத்து பதிவிட்ட திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் (MK Stalin), "பன்முகத்தன்மைக்கு புதைகுழி தோண்டுகிறவர்களே அதில் புதையுண்டு போவார்கள் எனக்கடுமையாக சாடியுள்ளார்.


அவர் கூறியதாவது, இந்தி தெரியாது என்று சொன்னதால், 'நீங்கள் இந்தியரா?' என்று விமானநிலைய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கனிமொழியை பார்த்துக் கேட்டுள்ளார். 


இந்திதான் இந்தியன் என்பதற்கான அளவுகோலா? இது இந்தியாவா? “இந்தி”-யாவா?


பன்முகத்தன்மைக்கு புதைகுழி தோண்டுகிறவர்களே அதில் புதையுண்டு போவார்கள்! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


ALSO READ | பொய் சொல்லி மாட்டிக் கொண்டாரா கனிமொழி... சூடு பிடிக்கும் அரசியல் களம்...!!!