சித்ராவின் மரணம் எப்படி நடந்தது? நிபுணர் குழு அறிக்கையில் அதிர்ச்சி..
சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை தொடர்பாக நிபுணர் குழு அறிக்கை வெளியாகிவுள்ளது. இதற்கு முன்னதாக, ஸ்ரீபெரும்புதூர் ஆர்டிஓ மேற்கொண்ட விசாரணையில் சித்ராவின் தற்கொலைக்கு வரதட்சணை காரணம் இல்லை என்று தெரியவந்தது.
சென்னை: சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை தொடர்பாக நிபுணர் குழு அறிக்கை வெளியாகிவுள்ளது. சித்ராவின் தற்கொலை தொடர்பான அதிர்ச்சியூட்டும் காரணங்கள் கொண்ட அறிக்கையை சென்னை உயர் நீதிமன்றத்தில் நிபுணர் குழு தாக்கல் செய்துள்ளது.
இந்த அறிக்கை சித்ரா (Actress chitra) மரண வழக்கின் விசாரணைக்கு உதவியாக இருக்கும். சித்ரா இறந்து மாதக்கணக்கில் ஆனாலும் மர்மம் விலகவில்லை.
ஸ்ரீபெரும்புதூர் ஆர்டிஓ மேற்கொண்ட விசாரணையில் சித்ராவின் தற்கொலைக்கு வரதட்சணை காரணம் இல்லை என்று தெரியவந்தது. ஆனால், சித்ரா தற்கொலைக்கு காரணம் வேறு ஏதாவது ஒன்றாக இருக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் ஆர்.டி.ஓ விசாரணையில் கூறப்பட்டது.
ALSO READ | #VjChitra: பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையின் தற்கொலைக்கு காரணம் என்ன?
இதனிடையில் ஹேமந்த்தின் குடும்ப நண்பர் கூறிய குற்றச்சாட்டுகள் சித்ராவின் தற்கொலைக்கு காரணம் கணவர் தான் என்று நினைக்கத் தோன்றியது. ஆனால் உண்மை என்ன என்பது இன்னும் வெளிவரவில்லை.
சித்ரா தற்கொலை விஷயம் கேள்விபட்ட நாளே, ஹேமந்த் மீது தான் குற்றம் சுமத்தினார் சித்ராவின் தாய். தற்போது சிறையில் இருக்கும் சித்ராவின் கணவர் ஹேமந்த் தாக்கல் செய்த மனு விசாரணையில் உள்ளது.
வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்ட பின் 13 சாட்சிகள் மீண்டும் விசாரிக்கப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்தது என்றும், சித்ரா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் நிபுணர்குழு அறிக்கை அளித்துள்ளது என இன்றைய விசாரணையில் காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.
வழக்கு விசாரணையை இந்த மாதம் ஐந்தாம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நிபுணர் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் அன்று வழக்கு விசாரணை நடைபெறும் என்பதால் சித்ரா தற்கொலை வழக்கில் இன்னும் சில நாட்களில் மேலும் பல விஷயங்கள் வெளிவரலாம்.
ALSO READ | #VjChitra: முல்லையாக மலர்ந்து ஹோட்டலில் வாடிய மலராய் உதிர்ந்த சித்ரா
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR