Chennai Rain Latest News Updates: சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு அடுத்த சில நாள்களுக்கு தொடர் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது தலைநகர் சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகள், காய்கறி கடைகள், மளிகை கடைகள் உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் கடுமையாக உள்ளன. காய்கறி, பால், அரிசி, முட்டை, மெழுகுவர்த்தி, தீப்பெட்டி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கி இருப்பு வைத்துக்கொள்ள மக்கள் கடைகளில் அலைமோதி வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனால், அத்தியாவசிய பொருள்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. சென்னை தற்போது கனமழை பெய்யாவிட்டாலும் கூட நகரின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. நகரின் முக்கிய பகுதிகளான வடபழனி, கோடம்பாக்கம், சாலிகிராமம், வளசரவாக்கம், வேளச்சேரி, பள்ளிக்கரணையில் மிதமான மழை பெய்துள்ளது. இருப்பினும் சென்னையில் கனமழையை அடுத்த 6-12 மணிநேரத்திற்கு எதிர்பார்க்கலாம் என தனியார் வானிலை ஆய்வாளர் ராஜா ராமசாமி அவரது அதிகாரப்பூர்வ X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  


பள்ளி, கல்லூரிகள் விடுமுறை


வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன் தற்போது வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு பகுதி காரணமாக அடுத்த 5 நாள்களுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவாரூர், நாகை, மயிலாடுதுறையில் நாளை (அக். 15) அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு நாளை மறுநாள் (அக். 16) ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் எப்போது மழை பெய்யும்?- பாலச்சந்திரன் போட்ட பட்டியல்


இந்த தொடர் அதிகனமழை எச்சரிக்கை காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் இதுவரை பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் மென்பொருள் பணியாளர்களை வீட்டில் இருந்தே பணிபுரியும்படியும் அரசு தரப்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருக்கிறது. அனைவரும் குடும்பத்துடன் பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்க வேண்டும் எனவும் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். 


நாளை காலையிலும் பரபரப்பாக இருக்கலாம்...


இந்நிலையில், மழை தற்போது பெரிதாக இல்லாததால் அடுத்தடுத்த நாள்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்களை இருப்பு வைத்துக்கொள்ள மக்கள் முட்டிமோதி வருகின்றனர். அரிசி, காய்கறிகள், பலசரக்கு பொருள்கள், பேட்டரி, மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, கொசுவர்த்தி ஆகியவற்றை வாங்க மக்கள் கடைகளில் குவிந்து காணப்படுகின்றனர். இதில் தற்போது இரவாகிவிட்டது என்பதால் பால் தட்டுப்பாடு அதிகமாக இருக்கும். 


எனவே, நாளை காலையிலும் பால், காய்கறிகளை வாங்க மக்கள் கூட்டம் கூட்டமாக சந்தைகளை நோக்கியும், சூப்பர் மார்க்கெட் மற்றும் சில்லறை கடைகளை நோக்கியும் படையெடுப்பார்கள் என கூறப்படுகிறது. மின்தடை ஏற்பட்டாலும் அதை சமாளிக்க டார்ச்லைட்டை சார்ஜ் போட்டுவைத்துக்கொள்ளவும், மொபைல் மற்றும் பவர் பேங்க் உள்ளிட்டவற்றை சார்ஜ் போட்டுவைத்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நாளை சென்னையில் மெட்ரோ ரயில் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படும் எனவும் மெட்ரா நிர்வாகம் அறிவித்துள்ளது.   


மேலும் படிக்க | கனமழையை எதிர்கொள்ள நடவடிக்கை என்ன? துணை முதலமைச்சர் உதயநிதி பதில்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ