கள்ளக்காதலால் நடந்த கொடூரம் ஒன்று தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த வழக்கில் கள்ளக் காதல் சம்பவத்தில் பெண்ணுக்கு விஷ ஊசி செலுத்தி கொல்ல முயன்றதாக முதலில் கணவர் கைது செய்யப்பட்டார். மேலும் தலைமறைவாக இருந்த கள்ளக் காதலி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்ரீதரன். இவர் தனியார் மருத்துவமனையில் கேட்டரிங் சூப்பர்வைசராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கீர்த்தனா. இவர்களது மகன் சாய் சர்வேஷ். ஸ்ரீதரன் தனது குடும்பத்தினருடன் அன்னூர் மசக்கவுண்டன் செட்டிபாளையம் ஊராட்சியில் உள்ள செந்தாம்பாளையம் பகுதியில் வசித்து வருகிறார்.  


இந்த நிலையில் ஸ்ரீதரனுக்கும், அவருடன் வேலை செய்யும் ஒரு பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக் காதலாக மாறியது. இதை கீர்த்தனா கண்டித்து உள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த ஸ்ரீதரன் கீர்த்தனாவை தாக்கி உள்ளார். 


மேலும் படிக்க | பட்டாசு மற்றும் இனிப்பு: கொண்டாட்டத்தில் திமுக கூட்டணி; ஒதுங்கிய அதிமுக 


இந்த நிலையில் கள்ளக் காதல் விவகாரத்தில் கணவர் உள்பட 3 பேர் தனக்கு விஷ ஊசி செலுத்தி கொல்ல முயன்றதாக கீர்த்தனா அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணையை தொடக்கினர். அந்த விசாரணையில் ஸ்ரீதரன், அவரின் கள்ளக் காதலி ரம்யா, நண்பர் பழனி  ஆகிய 3 பேரும் சேர்ந்து கீர்த்தனாவுக்கு விஷ ஊசி செலுத்தி கொல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து ஸ்ரீதரனை போலீசார் கைது செய்தனர்.



மேலும் தலைமறைவான ரம்யா, பழனியை போலீசார் தேடி வந்தனர். இதற்கிடையே  ரம்யா, பழனி 2 பேரும் கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜே.புதூர் பகுதியில் இருப்பது தெரியவந்தது. உடனடியாக சம்பவ இடத்துக்கு அன்னூர் போலீசார் விரைந்து சென்று ரம்யா, பழனி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.



மேலும் படிக்க | இடைத்தேர்தல் வெற்றி எதிர்பார்த்த ஒன்றுதான் -அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ