தமிழகத்தில் அதீத வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் - மன்சூர் அலிகான்!
Mansoor Ali Khan Speech in Vellore: விவசாயி சின்னம் எனக்கும் வழங்கப்பட்டது, மனசாட்சி இடம் கொடுக்காததால் அதை ஏற்றுக் கொள்ளவில்லை என வேலூரில் மன்சூர் அலிகான் பேட்டி அளித்துள்ளார்.
Mansoor Ali Khan Speech in Vellore: நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில் இன்று அதன் மீதான பரிசீலனை வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மொத்தம் 50 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்த நிலையில் அதிமுக, திமுக, பாஜக, நாம் தமிழர் மற்றும் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவர் நடிகர் மன்சூர் அலிகான் உள்ளிட்டோரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 16 மனுக்கள் இதுவரை நிராகரிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனு பரிசீலனைக்காக திமுக நாம் தமிழர் மன்சூர் அலிகான் ஆகிய வேட்பாளர்களும். பாஜக அதிமுகவில் வேட்பாளர் தரப்பில் அவர்களது பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
மேலும் படிக்க | டிடிவி தினகரன் மீது தேனியில் வழக்குப்பதிவு: போலீசார் நடவடிக்கை, காரணம் என்ன?
வேட்புமனு மீதான பரிசீலனை முடிந்து நடிகர் மன்சூர் அலிகான் புறப்படும்போது அளித்த பேட்டியில் ஜெயலலிதா அம்மாவை குத்துயிரும், கொலை உயிருமாக ஆக்கியதற்காக ஓபிஎஸ் தனித்து விடப்பட்டுள்ளார். ஓபிஎஸ் என்னை போன்று தனி சின்னத்திற்காக கெஞ்சி கொண்டிருக்கிறார். நான்தான் முதல் முதலில் தமிழகத்தில் வேட்புமனுதாக்கல் செய்தேன். முதல் முதலில் அதீத வாக்கு வித்தியாசத்தில் நான்தான் வெற்றி பெறுவேன். கே.வி.குப்பம் பகுதியில் ஒரு மாட்டு ஆஸ்பத்திரி கூட இல்லை.
தேர்தலில் நிற்க நோக்கமே மத்தியில் பாசிச பிசாசாக உள்ள மோடி அரசை வேர் அறுக்க வேண்டும் என்பதற்காகத்தான். முன்னாள் முதல்வரை தீர்த்து கட்டியதே அவர்கள் தான் இதை வெளிப்படையாக சொல்லி வருகிறேன். எல்லா ஆவணமும் கேஸ் போட்டு வாங்கி வைத்துள்ளேன். இந்த பக்கம் அதிமுக அந்த பக்கம் பாஜக இரண்டையும் எதிர்ப்பது தான் எனது நோக்கம். அதிமுக, பாஜக மட்டுமல்ல அனைவரையும் நான் தாக்கி பேசுவேன். எனக்கும் விவசாய சின்னம் வந்தது ஆனால் மனசாட்சி இடம் கொடுக்காததால் விவசாய சின்னத்தை டிக் பண்ண வில்லை.
டார்ச் லைட்டும் இருந்தது. மற்றவர்களுக்கு விளக்கு பிடிக்கும் வேலை எனக்கு இல்லை என்பதால் அதை நான் விட்டு விட்டேன். சீமானுக்கு சின்னம் மறுக்கப்பட்டது, மிகப்பெரிய அநியாயம் தான். நான்கு ஐந்து லட்சம் பேருக்கு வட்டி இல்லா கடன் கொடுக்க திட்டம் வைத்துள்ளேன். திருமா, சீமான், வைகோ உள்ளிட்டோருக்கு சின்னம் மறுக்கப்பட்டுள்ளது. ஈரோடு எம்பி கேணேஷ மூர்த்தி மறைவிற்கு நான் இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். இனிமேல் இதுபோல் நிகழக் கூடாது.
மேலும் படிக்க | பல முக்கிய வேட்பாளர்களின் வேட்புமனு நிறுத்திவைப்பு! கடும் வாக்குவாதம்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ