TN election 2021:21 தொகுதிகளுக்கான காங்கிரஸின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு
21 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.
சென்னை: 21 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேசிய கட்சியான காங்கிரசுக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எஞ்சிய 4 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட வேண்டும்.
காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படுவதற்கு முன்னரே காங்கிரஸ் கட்சியில் நிலவும் உட்பூசல் பூதாகரமாக வெடித்து அனைவருக்கும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் உள்ள சத்தியமூர்த்தி பவனில் கட்சியின் உட்பிரிவுத் தலைவர்களின் ஆதாரவாளர்கள் போராட்டம் நடத்துகின்றனர்.
கட்சியில் இருந்து வெளியேறி மீண்டும் இணைந்தவர்களுக்கு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிப்பதாகக்கூறி ஒரு தரப்பினர் உண்ணாவிரதம் இருந்தனர்.
வேட்பாளர் பட்டியல் தொடர்பாக மூன்று கோஷ்டிகள் போராட்டத்தில் ஈடுபட்டது கட்சியின் தலைமைக்கும் திகைப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜயதரணியை வேட்பாளராக களமிறக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து ஒரு கோஷ்டி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டால், ஆரணித் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்ணு பிரசாத் தனது ஆதரவாளர்களுடன் உண்ணாவிரதம் இருந்தார்.
Also Read | Bank Strike: இன்று முதல் 3 நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது
இந்த இரு பிரிவினரும் தேவையின்றி பிரச்சனை செய்ய மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி ஆதரவாளர்கள் போட்டி உண்ணாவிரதம் இருந்தனர்.
இதுபோன்ற உட்கட்சி பூசல்களுக்கு இடையே தமிழக தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. அடுத்த கட்டமாக வேட்பாளர் பட்டியல் வெளியானால் மேலும் சிக்கல்கள் அதிகரிக்கக்கூடும் என்பதால் கட்சியினர் மத்தியிலேயே அதிருப்தி நிலவுகிறது.காங்கிரஸ் கட்சியின் இந்த உட்பூசலால், திமுக தலைமையிலான கூட்டணிக்கும் தர்மசங்கடம் ஏற்பட்டுள்ளது.
Also Read | Mithali Raj 10,000 சர்வதேச ரன்கள் எடுத்த முதல் இந்திய கிரிக்கெட் வீராங்கனை
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR