செல்பி மோகத்தால் நீரில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன்; தேடும் பணி தீவிரம்
மக்கள் மத்தியில் செல்பி எடுத்துக் கொள்ளும் பழக்கம் அதிகரித்துள்ளது. இதனால், பல சமயங்களில் விபரீதங்கள் நடக்கின்றன. அந்த வகையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் மத்தியில் செல்பி எடுத்துக் கொள்ளும் பழக்கம் அதிகரித்துள்ளது. இதனால், பல சமயங்களில் விபரீதங்கள் நடக்கின்றன. அந்த வகையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை சேராப்பட்டு அருகே சிறுக்கலூர் அருவிக்கு வந்த சதீஷ் 22 . வெங்கடேஷ் 17. பூமிநாதன் 22. சுரேஷ் 12 மூவரும் அருவியின் மேற்பரப்பில் நின்று செல்பி எடுத்துக் கொண்டு இருந்துள்ளனர். சுரேஷ் என்ற சிறுவன் தானும் செல்பி எடுப்பதாக கூறி விட்டு ஆற்றைக் கடக்க முயன்ற போது நீர்சுழலில் விழுந்து அடித்துச் செல்லப்பட்டான். ஊர் பொதுமக்கள் மற்றும் சங்கராபுரம் தீயணைப்பு துறையினர் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ALSO READ | சென்னையில் கனமழை: முதல்வர் ஸ்டாலின் இரண்டாவது நாளாக ஆய்வு
விசாரணையில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன் திருவண்ணாமலை (Thiruvannamalai) மாவட்டம் வாணாபுரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் மகன் சுரேஷ் 12 என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர் தொடர்ந்து காலையில் இருந்து இதுவரை ஊர் பொதுமக்கள் மற்றும் சங்கராபுரம் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர் செல்பி மோகத்தால் அருவியில் சிறுவன் தவறி விழுந்து அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் மாவட்டத்தில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக சிறுவனின் உடலை தேடும் பணி இரவு நேரத்தில் இருள் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பின் காலை மீண்டும் மீட்புபணி தொடரும் என தீயணைப்புத்துறையினர் கூறினர்.
ALSO READ | தமிழகத்தில் கனமழை: மத்திய அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும் என பிரதமர் உறுதி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR