என் பெயரை வைத்து மோசடி செய்கிறார்கள்: தல அஜித் எச்சரிக்கை..!!!
தனது பெயர் தவறாக பயன்படுத்தப்படுவது தெரிந்தால், உடனே, தனது மேலாளர் சுரேஷ் சந்திராவிடம் தெரிவிக்குமாறும் நடிகர் அஜித் குமார் கேட்டுக் கொண்டார்.
தமிழ் திரைப்பட நடிகர் அஜித் குமார், ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படும் தல அஜித், தனது பெயரை வைத்துக் கொண்டு மோசடி நடப்பதை அறிந்தவுடன், உடனடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
2011 ஆம் ஆண்டில், ரசிகர் மன்றங்கள் காரணமாக, அரசியலில் தனது பெயரை பயன்படுத்த முயற்சிகள் நடந்ததை அடுத்து, தனது ரசிகர்கள் மன்றங்களை கலைத்து விட்டார். 2019ம் ஆண்டிலும் தனது பெயரை அரசியலுக்காக பயன்படுத்த வேண்டாம் என நடிகர் அஜித் கேட்டுக் கொண்டார்.
தற்போது, தனது பெயரை பயன்படுத்தி, திரைத்துறையில் ஆதாயம் தேடுவதாக வந்த தகவலை அடுத்து, இப்போது அவர் தனது மேலாளர் சுரேஷ் சந்திரா மட்டுமே, சினிமா துறை தொடர்பான விஷயங்களுக்காக தொடர்பு கொள்வார் என்றும் சினிமா தொடர்பான விஷயங்களுக்கு அவரை மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும் எனவும் விளக்கம் அளித்துள்ளார்.
தனது பெயரை யாராவது தனது பெயரை தவறாகப் பயன்படுத்தினால், அதற்கு அவர் எந்த வகையிலும் பொறுப்பேற்க முடியாது என்று, அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தனது பெயர் தவறாக பயன்படுத்தப்படுவது தெரிந்தால், உடனே, தனது மேலாளர் சுரேஷ் சந்திராவிடம் தெரிவிக்குமாறும் நடிகர் அஜித் குமார் கேட்டுக் கொண்டார்.
கொரோனா (Corona) பரவல் காரணமாக எச் வினோத் இயக்கத்தில், போனி கபூர் (Boney Kapoor) தயாரித்த தனது ” வலிமை “ என்னும் திரைப்பட வேலையை ஒத்தி போடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | Bigg Boss தமிழ் சீசன் 4 இல் வருகிறாரா இந்த ‘ஷகலக பேபி’ நடிகை? May be…..