கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாட்டு மக்களை பாடாய் படுத்தி வருகின்றது. பல மாநிலங்களில் ஒற்றை நாள் தொற்றின் அளவு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டு உள்ளது. தமிழகத்திலும் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது கவலை அளிக்கும் விஷயமாக உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 24 மணி நேரத்தில், தமிழ்நாட்டில் 34,875 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். தமிழகத்தில் கொரோனா தொற்றால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,99,225 ஐ எட்டியுள்ளது. சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 2,53,576 ஆக உள்ளது என மாநில சுகாதார துறை அறிக்கை தெரிவித்துள்ளது.

நேற்று கொரோனா தொற்றால் (Coronavirus) பாதிக்கப்பட்டு 365 பேர் தமிழகத்தில் இறந்தனர். இதனுடன் தொற்று பாதிப்பால் தமிழகத்தில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 18,734 ஆக உயர்த்தியுள்ளதாக சுகாதார செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது. நேற்று, 23,863 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பினர். 

இந்நிலையில், கொரோனா பரவலை கட்டுபடுத்தும் நடவடிக்கையாக, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருப்பூர், கோவை, சேலம், மதுரை, திருச்சி மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்ய உள்ளார்.


முதலில் சேலம் செல்ல உள்ள முதலமைச்சர் ஸ்டாலின், 12.15 மணிக்கு, 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி (Corona Vaccine) போடும் பணியை தொடக்கி வைக்க இருக்கிறார். பின்னர் கோவை செல்லும் அவர், அங்கு கொடிசியா வளாகம், குமருகுரு கல்லூரி உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொள்வார். பின்னர் இன்றிரவு விமானம் மூலம் மதுரைக்குச் செல்லும் மு.க.ஸ்டாலின், நாளை காலை, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கும் முதலமைச்சர், பின்னர் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவிருக்கும் பகுதியில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.


அதன் பின்னர், நாளை மதியம் திருச்சி செல்ல உள்ள மு.க.ஸ்டாலின், அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவார். பின்னர் மாலை 6.15 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்திக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இரவு  சென்னை திரும்புவார்.


ALSO READ | பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சாதாரண விடுப்பு: தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவு


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR