பாஜக தலைவர் அண்ணாமலைக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு ?
பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பாஜகவை செல்வாக்கு பெற்ற கட்சியாக மாற்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தீவிரமாக செயல்பட்டு வருகிறார். திமுக ஆட்சிக்கு பிறகு அக்கட்சியின் மீது அடுக்கான குற்றச்சாட்டுகளை அண்ணாமலை முன்வைத்து வந்தார். இதற்கிடையே, கடந்த இரு மாதங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து பாஜக தலைவர் அண்ணாமலையின் பாதுகாப்பு கருதி மாநில அரசால் ‘ஒய் பிளஸ்’பிரிவு வழங்கப்பட்டது. பின்னர் அது ‘எக்ஸ்’பிரிவு பாதுகாப்பாகக் குறைக்கப்பட்டது.
அதுகுறித்து அண்ணாமலை தனது ஆட்சேபத்தை வெளிப்படுத்தியிருந்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் நெல்லை மேலப்பாளையத்தைச் சேர்ந்த நபர் அண்ணாமலைக்கு கொலை மிரட்டல் விடுத்தது பெரும் அதிர்வலைகளை கிளப்பியது. வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பந்தப்பட்டவரை கைது செய்தனர்.
இத்தகைய சூழ்நிலையில், பாதுகாப்பு அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு அண்ணாமலைக்கு ‘ஒய்’பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் அண்ணாமலைக்கு 2 தனி பாதுகாப்பு அதிகாரிகள் உள்பட 11 பேர் கொண்ட ஆயுதமேந்திய சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் மற்றும் மாநில போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்க உள்ளனர். ‘ஒய் பிரிவு’என்பது இந்தியாவில் 4வது இடத்தில் இருக்கக்கூடிய பாதுகாப்பு பிரிவு என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | திமுகவிற்கு திராணி இருந்தால் என்னை கைது செய்யட்டும்- அண்ணாமலை சவால்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR