திமுகவிற்கு திராணி இருந்தால் என்னை கைது செய்யட்டும்- அண்ணாமலை சவால்!

துபாய் முதலீடுகள் தமிழகத்திற்கு வரும் நிதியா அல்லது கோபாலபுரதிற்கு வர போகும் நிதியா என அண்ணாமலை கேள்வி!

Written by - Sivaraman Karnan | Edited by - Bhuvaneshwari P S | Last Updated : Mar 29, 2022, 02:21 PM IST
  • கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை
  • முடிந்தால் என்னை கைது செய்யுங்கள்-அண்ணாமலை
  • “துபாய் முதலீடுகள் தமிழகத்திற்கா? கோபாலபுரத்துக்கா?”
திமுகவிற்கு திராணி இருந்தால் என்னை கைது செய்யட்டும்- அண்ணாமலை சவால்! title=

திமுக அரசுக்கு திராணி இருந்தால் என்னை கைது செய்யட்டும் என அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.

பாஜக தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலை கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், "நக்கீரன், ஜீனியர் விகடன் போன்ற பத்திரிகைகளில் 5000 கோடி ரூபாய் வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட உள்ளதாக செய்தி வந்துள்ளது. தனி விமானத்தில் உதயநிதி ஸ்டாலின், சபரீசன், உதவியாளர்கள் வின்சென்ட், விஜய் மற்றும் குடும்ப ஆடிட்டர்கள் துபாய்  சென்றுள்ளனர். 5000 கோடி என்பது என்ன மர்மம்? தொடர்ச்சியாக முதல்வர் குடும்பத்தினர் ஏன் துபாய் செல்கிறார்கள் ?துபாய் முதலீடுகள் தமிழகத்திற்கு வரும் நிதியா அல்லது கோபாலபுரதிற்கு வர போகும் நிதியா ?

twitter

மேலும் படிக்க | ஸ்டாலின் கல்லா பெட்டியைத்தான் திறக்கிறார்; சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிக்கிறது: ஜெயக்குமார் குற்றச்சாட்டு

நான் பேசிய அனைத்து விஷயங்களை ஆதார பூர்வமாக சந்தித்து இருக்கிறேன். நான் அதிமுக உறுப்பினர்கள் தூண்டு கோளால் பேசுவது போன்ற அவதூறை பரப்புகிறார்கள். நான் அடுத்த 6 மணி நேரம் பாஜக அலுவலகத்தில் தான் இருப்பேன்.முடிந்தால் என்னை கைது செய்யுங்கள். நீங்கள் என்னை இன்று கைது செய்யவில்லை என்றால் மக்களிடம் மாட்டி கொள்ள போகிறீர்கள். உங்களுக்கு திராணி இருந்தால் என்னை கைது செய்யுங்கள். ரூ. 6100 கோடி முதலீட்டில் 70 சதவீதத்தை கேரளாவை சேர்ந்த யூசுப் அலி மட்டும் முதலீடு செய்துள்ளார். 

மேலும் படிக்க | முதலமைச்சர் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு..பாஜக நிர்வாகி கைது

பி.ஜி.ஆர் நிறுவனத்தால் செயல்படுத்தப்படும் மின் திட்டங்கள் நஷ்டத்தில் இயங்கும் என தெரிந்தும் டான்ஜெட்கோ அனுமதி கொடுத்தது ஏன் ? யார் சிபாரி செய்தார்? தொட்டம்பட்டிலிருந்து வந்த என் மீது கை வைத்து பார்க்கட்டும்.” என்று பேசியுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

 

Trending News