சென்னை சிஐடி நகர் பகுதியில் மழைக்கால நோய்கள் முன்னெச்சரிக்கை சிறப்பு மருத்துவ முகாமினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். சிஐடி நகரைச் சேர்ந்த பொதுமக்கள் மருத்துவ முகாமில் கலந்துகொண்டு பரிசோதனை செய்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் மா சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் ஒவ்வொரு பருவமழைக்கும் முன்னதாக பருவ மழை காரணங்களால் ஏற்படுகிற நோய் பாதிப்புகள் கண்டறிந்து அவற்றுக்கு சிகிச்சை அளிக்கும் பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. வடகிழக்கு பருவமழை, தென்மேற்கு பருவமழை என்று ஒவ்வொரு பருவமழையின் போதும் ஏற்படக்கூடிய பாதிப்புகளின் தொடர்ச்சியாக கண்டறியப்பட்டு நடவடிக்கை  எடுக்கப்பட்டு வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | தமிழ், தமிழ்நாடு என ஒரு வார்த்தைகூட இடம்பெறாத மத்திய பட்ஜெட் - திட்டமிட்ட புறக்கணிப்பா?


அந்த வகையில் கடந்த மூன்று ஆண்டுகளாக மழைக்கால நோய் பாதிப்புகள் அனைத்தும் கட்டுக்குள் இருக்கிறது. கடந்த ஆண்டு பொருத்தவரை அக்டோபர் ஆரம்பித்த டிசம்பர் இறுதி வரை பத்தாயிரம் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் என 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முகாம்கள் நடத்தப்பட்டு மிகப்பெரிய அளவிலான நோய் பாதிப்புகள் கட்டுக்குள் வைக்கப்பட்டு இருக்கிறது. 2017 பொறுத்த வரை தமிழ்நாட்டின் அதிகமாக டெங்கு பாதிப்பு என்கின்ற வகையில்  23 ஆயிரத்து 294 பேருக்கு ஒரே ஆண்டில் டெங்கு பாதிப்பு ஏற்பட்டு 65 பேர் மரணம் அடைந்தார்கள். அதேபோல் 2012 ஆம் ஆண்டில் 66 பேர்  பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலை இருந்தது. அந்த வகையில் தொடர்ந்து 60, 70 பேர் உயிரிழப்பு இருந்து வந்த நிலைஉள்ளாட்சி நிர்வாகங்கள் ஊரக உள்ளாட்சி நகர்ப்புற உள்ளாட்சி ஆகிய அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து மக்கள் நல்வாழ்வுத்துறை தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிற காரணத்தினால் டெங்கு பாதிப்பினால் ஏற்படுகிற உயிரிழப்புகளும் கட்டுக்குள் இருந்து வருகிறது.


தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தென்மேற்கு பருவ மழை அதனால் ஏற்படுகிற நோய் பாதிப்புகள் டெங்கு உன்னி காய்ச்சல், எலி காய்ச்சல் மஞ்சள் காமாலை மற்றும் influenzaa காய்ச்சல் போன்ற காய்ச்சல் பாதிப்புகள் தொடர்ந்து கண்டறியப்படும், பணிகளை மக்கள் நல்வாழ்வு துறையும் தமிழகத்தின் உள்ளாட்சி அமைப்புகளும் தொடர்ந்து செய்து வருகிறது. சென்னை, கோவை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தேனி, மதுரை, திருநெல்வேலி, நாமக்கல், தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு  பொதுவாகவே அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. அதைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகளை துறை மேற்கொண்டு வருகிறது. கடலூர், சென்னை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் உன்னி காய்ச்சல் கண்டறியப்பட்டு இருக்கிறது.  எலி காய்ச்சலை பொருத்தவரை சென்னை, கன்னியாகுமரி, திருவள்ளூரில் எலி காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது.


தமிழகத்தைப் பொறுத்தவரை டெங்கு காய்ச்சலை தடுப்பதற்கு உள்ளாட்சி அமைப்புகளோடு ஒருங்கிணைத்து கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் தடுக்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு. இதற்கென 22 ஆயிரத்து 384 தற்காலிக பணியாளர்கள் இதற்கிட நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். ஒரு மாத காலத்திற்குள் சென்னையில் அனைத்து துறை செயலாளர் கூட்டம் நடத்தப்பட இருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை புகை மருந்து அடிக்கும் இயந்திரங்கள் 16,005 உள்ளது. இதற்கு தேவையான மருந்துகள் 51 ஆயிரத்து 748  கையிறுபில் உள்ளது.  தமிழகத்தில் யாருக்காவது காய்ச்சல் பாதிப்புகள் இருந்தால் அவர்களாகவே தனியாக மருத்துவர்கள் ஆலோசனை இல்லாமல் மருந்து மாத்திரைகளை உட்கொள்ள வேண்டாம்.


காய்ச்சல் பாதிப்பு தென்பட்டால் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் அடைய வேண்டும் மருத்துவமனைகளை அணுகி மருந்து மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும். அவசர உதவி தேவைப்பட்டால் தமிழ்நாட்டில் முதலமைச்சருடைய வழிகாட்டுதலோடு  14 108 போன்ற அவசர உதவிகளை நாட வேண்டும். கேரளா மற்றும் தமிழக எல்லைகளை பாதுகாப்பு பணியினை பொது சுகாதாரம் தன் தொடர்ச்சியாக ஈடுபட்டு இருக்கிறது.  போக்குவரத்து வாகனங்கள் எதுவாக இருந்தாலும் எல்லைகளை கடந்து வருகிற சாதாரண நடை பயணிகளாக இருந்தாலும் அனைவரிடமும் பரிசோதனை பணியானது தொடர்ச்சியாக செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாடு கேரளா இடைபட்ட ஐந்து இடங்களில் நிரந்தர முகாம்கள் அமைக்கப்பட்டு தொடர் கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தமிழகத்தை பொறுத்த வரை நிபா வைரஸ்வாதிப்பு யாருக்கும் இல்லை.


மேலும் படிக்க | ஆகஸ்டில் மாணவர்களுக்கு டபுள் குஷி காத்திருக்கு... பள்ளி எத்தனை நாள்கள் லீவ் தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ