நிபா வைரஸிற்கு 14 வயது சிறுவன் உயிரிழப்பு! இந்த அறிகுறிகளை புறக்கணிக்க வேண்டாம்!

கேரளாவில் நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். அவருடன் தொடர்பில் இருந்த 214 பேர் தீவிர கண்காணிப்பில் இருப்பதாக கேரள சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Jul 22, 2024, 01:31 PM IST
  • கேரளாவில் பரவும் நிபா வைரஸ்.
  • 14 வயது சிறுவன் உயிரிழப்பு.
  • அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
நிபா வைரஸிற்கு 14 வயது சிறுவன் உயிரிழப்பு! இந்த அறிகுறிகளை புறக்கணிக்க வேண்டாம்! title=

கேரளா மாநிலத்தில் மலப்புரத்தில் உள்ள பாண்டிக்காட்டைச் சேர்ந்த 14 வயது சிறுவனுக்கு நிபா வைரஸ் தொற்று இருப்பது கடந்த சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதனை புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனம் தொற்றை உறுதி செய்தது. "அந்த சிறுவனுக்கு நிபா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே மலப்புரத்தில் வசிப்பவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். அவர் தற்போது ஆபத்தான நிலையில் உள்ளார். மேலும் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டுள்ளார். அந்த சிறுவன் எங்கு எங்கு சென்றார், அவருடன் தொடர்பில் இருந்தது யார் யார் தொடர்பான விவரங்கள் எடுக்கப்பட்டு வருகிறது" என்று கேரள மாநில சுகாதார அமைச்சர் வீனா ஜார்ஜ் கடந்த வாரம் தெரிவித்து இருந்தார்.  

மேலும் படிக்க | பறிப்போகுமா யோகியின் முதல்வர் நாற்காலி? பாஜகவுக்குள் பரபரப்பு... கைமாறும் தலைவர் பதவி - ஏன்?

இந்நிலையில், நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட அந்த 14 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார் என்று கேரள சுகாதாரதுறை தெரிவித்துள்ளது. மேலும் அவருடன் தொடர்பில் இருந்த 214 பேர் கண்காணிப்பில் இருப்பதாகவும், அவர்களில் 60 பேர் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும், அரசு அதிகாரிகள் துரிதமாக வைரஸ் பரவாமல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். மாரடைப்பு ஏற்பட்டு ஞாயிற்றுக்கிழமை சிறுவன் உயிரிழந்ததாக அரசு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 25 குழுக்கள் அமைத்து விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர். இதுதவிர, மலப்புரத்தில் உள்ள அரசு ஓய்வறையில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு மாவட்ட ஆட்சியர், காவல்துறை மற்றும் பிற அதிகாரிகள் தலைமையில் இயங்கி வருவதாக தெரிவித்துள்ளனர். 

நிபா வைரஸ் எப்படி பரவுகிறது?

நிபா வைரஸ் பழந்திண்ணி வெளவால்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. வெளவால்களில் இருந்து வெளியேறும் உமிழ்நீர் அல்லது அசுத்தமான உணவு மூலம் வைரஸ் தொற்று பரவலாம். மனிதர்களுக்கு நிபா தொற்று ஏற்பட்டால் முதலில் காய்ச்சல், தலைவலி மற்றும் தசை பிடிப்பு போன்றவை ஏற்படும். 5 நாட்கள் முதல் 2 வாரங்கள் வரை இந்த அறிகுறிகள் இருக்கும். நோய் தொற்று அதிகரித்தால் வலிப்பு, அதிக மன குழப்பம் அதிகரிக்கும், மேலும் இருமல், தொண்டை புண் போன்ற சுவாச பிரச்சனைகளும் ஏற்படும். இறுதியில் கோமா ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும்.

நிபா வைரஸுக்கு சிகிச்சை என்ன?

நிபா வைரஸ் தொற்று ஏற்பட்டால் அதனை சரி செய்ய இதுவரை தடுப்பு சிகிச்சை எதுவும் இல்லை. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நல்ல உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். உங்களுக்கு நோய் அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. நன்கு சமைக்கப்பட்ட உணவுகளை சாப்பிட வேண்டும். அடிக்கடி கை கழுவுதல், உடலை சுத்தமாக வைத்து கொள்ளுதல் மற்றும் பச்சையாக எந்த உணவையும் சாப்பிட கூடாது. இது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால் வைரஸ் பரவுவதை தடுக்கலாம். கேரளாவில் நிபா வைரஸ் பரவுவதைத் தடுக்க பாதிக்கப்பட்ட நபர்களை கண்டறிந்து அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. கேரளாவில் 2018ம் ஆண்டு முதன்முதலில் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. 25 ஆண்டுகளுக்கு முன்பு மலேசியாவில் இந்த வைரஸ் முதன் முதலில் தோன்றியது. அதன்பிறகு வங்காளதேசம் மற்றும் சிங்கப்பூரிலும் பரவியது.

மேலும் படிக்க | உத்தரப்பிரதேசத்தில் மூன்று மாசத்துக்கு 4 கோடி ரூபாய் EB பில்...! ஷாக்கான ஓனர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News