எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் என்றால் அப்ப நான் யார் ? - ஜெயலலிதா கேட்பது போன்ற போஸ்டர் வைரல்
Jayalalitha Questioning Poster : இடைக்காலப் பொதுச்செயலாளராக இ.பி.எஸ் பொறுப்பேற்ற பின்னரும், இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் பிரச்சனை முடிந்தபாடில்லை. ஜெயலலிதாவை வைத்து மீண்டும் சீண்டிப்பார்க்கும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு.
வழக்கம் போல போஸ்டர் சண்டை. ஒரு மாத களேபரங்களுக்கு பிறகு அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். ஆனாலும், ஒற்றைத் தலைமைப் பிரச்சனை இன்னும் தீர்ந்தபாடில்லை. தொடர்ந்து, இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் மோதல் நீடிக்கிறது.
மேலும் படிக்க | அதிமுகவின் புதிய மாவட்டச் செயலாளர்கள் - ஓபிஎஸ்ஸின் அடுத்த மூவ்
இதுபோதாதென்று, மாறி மாறி அதிமுக நிர்வாகிகளை நீக்கியும், சேர்த்துக்கொண்டும் விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள். இவையனைத்தையும் கடைக்கோடியில் அதிமுக கொடியை கட்டும் அதிமுக தொண்டர்கள் குழப்பத்துடன் பார்த்துக்கொண்டு இருக்கின்றனர்.
இதனிடையே, அறிக்கைச் சண்டை, சமூக வலைத்தள உரையாடல் சண்டை, கடிதச் சண்டை உள்ளிட்டவையெல்லாம் தாண்டி தற்போது அதிமுகவினர் போஸ்டர் சண்டைகளில் ஈடுபட்டு வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ஓ.பி.எஸ்ஸை விமர்சித்து விதவிதமான முறையில் போஸ்டர்களை ஒட்டி வந்தால், ஓ.பி.எஸ் தரப்பினரோ எடப்பாடி பழனியை விமர்சித்து நூதனமான முறையில் போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர்.
போஸ்டர்கள் மூலமாக எதிர்ப்பு தெரிவிக்கும் நடைமுறை காலங்காலமாக இருந்து வரும் நிலையிலும், ஒருவித ஆரோக்கியமான சூழல் இருந்தது. தற்போது இறந்தபோனவர்கள் எல்லாம் பேசுவது போன்ற உத்தியை அதிமுகவினர் கையாண்டு வருகின்றனர். நெல்லை ஆட்சியர் வளாகத்தைச் சுற்றியுள்ள சுவர்கள், வண்ணாரப்பேட்டை சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் புதிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், மறைந்த ஜெயலலிதாவே வந்து பேசுவது போல ஒரு கருத்துக்களைப் பதிவிட்டுள்ளனர்.
அதாவது, நெல்லை மாநகர பகுதியை சேர்ந்த அதிமுக பெண் பிரமுகர் தமிழரசி, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தொடர்ந்து பல்வேறு தலைப்புகளில் போஸ்டர் அடித்து ஓட்டி வருகிறார். இந்நிலையில், இன்று அவர் ஒட்டிய போஸ்டரும் வைரலாகியுள்ளது. அதில், பொதுச்செயலாளராக ஆகியுள்ள எடப்பாடி பழனிசாமியைப் பார்த்து மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கேள்வி கேட்பது போல் போஸ்டர் அடித்துள்ளார். இபிஎஸ் கழகத்தின் பொதுச்செயலாளர் என்றால் அம்மாவாகிய நான் யார்? என அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ