புதுடெல்லி: தமிழ்நாட்டில், இந்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாகவே, அரசியல் பரபரப்பு அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. இதற்கிடையில், நினைவுச்சின்னமாக மாற்றப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இல்லம் ஜனவரி 28ஆம் தேதி முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை ஆளும் அதிமுக (AIADMK) அரசு அண்மையில் தான் சென்னையில் மெரினா கடற்கரையில் ஜெயலலிதாவிற்கு நினைவிடத்தை (Puratchi Thalaivi Amma Dr. J. Jayalalithaa Memorial) உருவாக்கியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக அரசியலில் ஜெயலலிதாவின் இடம் மிகவும் பெரியது. அதனால்தான் இப்போது தேர்தலுக்கு முன்பு, அவரது ஆதரவாளர்களை மீண்டும் ஒரு முறை தங்கள் பக்கத்திற்கு ஈர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஜெயலலிதா இறுதி வரை வாழ்ந்துவந்த வீடு வேதா நிலையம் (Veda Nilayam). 


சென்னையின் போய்ஸ் கார்டனில் அமைந்துள்ள 'வேதா நிலையம்' தொடர்பாக தமிழக அரசு மற்றும் ஜெயலலிதாவின் அண்ணனின் வாரிசுகள் இடையே சட்டப் போர் தொடங்கியது. மூன்று வருட சட்ட போராட்டத்திற்கு பின்னர், மாநில அரசுக்கு இந்த வீடு கிடைத்தது.


Also Read | சக்கர நாற்காலியில் மருத்துவமனைக்கு செல்லும் சசிகலாவுக்கு Covid-19


ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம், ஒரு மூன்றடுக்கு பங்களா. ஜெயலலிதா திரையுலகில் உச்சத்தில் இருந்தபோது கட்டப்பட்டது. அதன் தரைத்தளத்தில் ஜெயலலிதாவின் தாயார் சந்தியா வீடு கட்டினார். அந்த தரைத்தளத்தின் மேல் 1991-96 காலகட்டத்தில் இரண்டு மாடிகளை ஜெயலலிதா   கட்டினார்.


மாநில அரசு எடுத்த இந்த முடிவு, சசிகலாவால் (Sasikala) எதிர்கொள்ள நேரிடலாம் என அஞ்சப்படும் பிரச்சனைகளுக்கான தீர்வாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது, தமிழக அரசியலில் சசிகலாவுக்கு அதிக சக்தி இருந்தது. 


இருப்பினும், இப்போது பெங்களூருவில் சிறைதண்டனை அனுபவித்து வருகிறார். உடல்நிலை சரியில்லாமல், கொரோனா தொற்றுடன் அவதிப்படும் ஜெயலலிதா தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.


நாளை அதாவது ஜனவரி 27ஆம் தேதியன்று சிறையில் இருந்து விடுதலை பெறும் சசிகலா வீடு திரும்பினால் அதிமுகவில் (AIADMK) சிக்கல்கள் அதிகமாகலாம்.  


Also Read | இனி ஆலயத்தில் வீற்றிருப்பார் அம்மா எனும் இதய தெய்வம் ஜெயலலிதா


இது ஒருபுறமிருக்க ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா நிலையம் அரசுடைமையாக்கப்பட்டது சசிகலா தரப்பினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்தால் எங்கே தங்குவார் என்று கேள்விகள் எழுந்தன. 


ஆனால் போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையம் கைவிட்டுப் போனாலும் போயஸ் கார்டனைவிட்டு போகக்கூடாது என்பதில் சசிகலா உறுதியாக இருந்தார். எனவே, தான் வெளியே வந்தாலும், போயஸ் கார்டன் பகுதியில் அங்கே வீடு கட்டத் தொடங்கிவிட்டதாக தகவல்கள் தெரிவித்தன.


அதன்படி, ஜெயலலிதாவின் நினைவுச்சின்னம் உருவாக்கப்பட்டுள்ள போயஸ் கார்டன் வீட்டிற்கு அடுத்தபடியாக சசிகலாவிற்காக ஒரு வீடு தயாராகிவிட்டதாக கூறப்படுவதும் குறிப்பிடத்தக்கது. இத்தகைய சூழ்நிலையில், அதிமுகவின் இரு குழுக்களுக்கிடையேயான சண்டை இன்னும் அதிகமாகலாம். இது இன்னும் சில மாதங்களில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் எதிரொலிக்கலாம்.


Also Read | இதய தெய்வமாக சரித்திரம் படைத்து கொடுத்துச் சிவந்த கரங்கள்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR