இனி ஆலயத்தில் வீற்றிருப்பார் அம்மா எனும் இதய தெய்வம் ஜெயலலிதா

மதுரையை ஆட்சி புரியும் அன்னை மீனாட்சிக்கு கோவில் இருப்பதைப் போல், தமிழகத்தை ஆண்ட ஜெயலலிதாவுக்கு ஆலயம் உருவாகிறது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இனிமேல் ஆலயத்தில் வணங்கப்படுவார்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 19, 2020, 09:40 PM IST
  • முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கோவில் கட்டப்படுகிறது
  • மதுரையை ஆட்சி புரியும் அன்னை மீனாட்சிக்கு கோவில் இருப்பதைப் போல், தமிழகத்தை ஆண்ட ஜெயலலிதாவுக்கு ஆலயம்
  • விரைவில் கோவிலுக்கு கும்பாபிசேகம் நடைபெறும்
இனி ஆலயத்தில் வீற்றிருப்பார் அம்மா எனும் இதய தெய்வம் ஜெயலலிதா title=

புதுடெல்லி: இதய தெய்வம், அம்மா, நிரந்தர முதலமைச்சர், கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளர் என்று அ.இ.அ.தி.மு.க தொண்டர்களால் வணங்கப்பட்ட மறைந்த முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா இனிமேல் ஆலயம் ஒன்றில் தெய்வமாக காட்சியளிப்பார்.

ஆச்சரியமாக இருக்கிறதா? இது கதையல்ல நிஜம். மதுரை (Madurai) மாவட்டம், திருமங்கலம் அருகே முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஆலயம் கட்டப்பட்டு வருவதாக கூறுகிறார் தமிழக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் (R.B. Udhayakumar) தெரிவித்துள்ளார். தமிழக அரசியலில் அம்மா இல்லாமல் அணுவும் அசையாது என்று கட்சியினர் கருதிய காலம் இருந்தது. அம்மா இல்லையென்றால் கட்சியே இருக்காது என்ற நிலையும் இருந்தது. அப்படி தன்னுடைய தனிப்பட்ட ஆளுமையால் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. 

எந்தத் துறையில் ஈடுபட்ட்டாலும் அதில் சிறப்பாக செயல்பட்டு தனக்கென தனியிடம் பிடிப்பவர் ஜெயலலிதா (Jayalaalitha) என்பதை அவர் திரைத்துறையில் நிரூபித்த பிறகு தான் அரசியலுக்கு (Politics) வந்தார்.

Also Read | சனிப்பெயற்சியை முன்னிட்டு திருநள்ளாறு கோயிலில் இன்று முதல் புதிய COVID விதிமுறைகள்

சினிமாத் துறையிலும் நடிப்பு மட்டுமல்ல, பாட்டு, நடனம் (Dance) வசன உச்சரிப்பு என தனிக் கொடி நாட்டி இரும்புப் பெண்மணியாக உருவெடுத்தவர் ஜெ.ஜெயலலிதா எனும் அம்மா.

5 முறை முதலமைச்ச்சராக மாநிலத்தை ஆண்ட அம்மா, தனது மறைவுக்குப் பிறகு ஆலயத்தில் (Temple) தெய்வமாக வணங்கப்படுவார் என்பதை மாநில வருவாய்த்துறை அமைச்சர் உதயக்குமார் தெரிவித்தார்.

அ.இ.அ.தி.மு.க-வின் (AIADMK) ஜெயலலிதா பேரவை சார்பில், கட்டப்பட்டு வரும் இந்த கோயிலின் பணிகளை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பார்வையிட்டார். அதன்பிறகு, அம்மாவின் ஆலயத்தை குறித்து பேசிய அவர், ‘அம்மாவை தெய்வமாகக் கருதி வணங்குகின்ற கட்சியின் ஒன்றரைக் கோடி தொண்டர்கள், மற்றும் அவர்களின் குடும்பத்தினர், ஜெயலலிதாவை குல தெய்வமாக கருதி வழிபட்டு வருகிறார்கள். இந்த ஆலயத்தில் ஜெயலலிதாவின் 6 அடி உயர வெண்கல சிலை அமைக்கப்படுகிறது. அதோடு, கட்சியின் நிறுவனர் எம்,ஜி,ஆரின் (MGR) 6 அடி உயர வெண்கல சிலையும் அமைக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.

Also Read | 2.6 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2500, பொங்கல் பரிசு: தமிழக முதல்வர்

அம்மாவை அனைவரும் வழிபடுவதற்கு தேவையான ஏற்பாடுகளும் இந்தக் கோவிலில் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் (Minister) தெரிவித்தார். விரைவில், ஆலயத்தின் பணிகள் முடிக்கப்பட்டுவிடும் என்றும் அவர் தெரிவித்தார். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில், ஆலயத்தின் கும்பாபிஷேகம் நடைபெறவிருப்பதாக தெரிகிறது.  

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News