Kalaignar Magalir Urimai Thittam: சமூக நீதி சார்ந்த திட்டங்கள் ஒன்றும் தமிழ்நாட்டிற்கு புதிதல்ல. கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலான திராவிட கட்சிகளின் ஆட்சியில் அடிப்படை உட்கட்டமைப்பை வளர்ந்தெடுத்ததில் தொடங்கி, எண்ணற்ற திட்டங்கள் இந்தியாவிற்கே, ஏன் சொல்லப்போனால் உலகிற்கே முன்னுதாரணமாக இருந்துள்ளன. வறுமை ஒழிப்பு என்ற பொருளாதாரம் சார்ந்த திட்டங்கள் மட்டுமின்றி சமத்துவத்தை நோக்கிய சமூகத்தை கட்டமைக்கவும், சமூக நீதியை நிலைநாட்டவும் தற்போது வரை பல திட்டங்கள் செயலில் உள்ளன எனலாம்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வகையில், தமிழ்நாட்டிற்கு இது மற்றுமொரு வரலாற்று சிறப்புமிக்க தருணம் என்று சொல்ல வேண்டும். இதுவரை செயல்படுத்தப்பட்ட திட்டங்களில் இருந்து தமிழ்நாடு மேலும் ஒரு பெரிய அடியை எடுத்து வைத்துள்ளது. 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்ப தலைவிகளுக்கு மாதாமாதம் 1000 ரூபாய் உரிமைத்தொகையாக வழங்கும் திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டுள்ளது. கலைஞர் பெண்கள் உரிமைத் தொகை என்ற இந்த திட்டம் ஆண்டுக்கு 12 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும் அளவிற்கு ஒரு மாபெரும் திட்டத்தை தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ளது.


ஏன் உரிமைத் தொகை?


இந்திய துணைக் கண்டத்தில் குடும்ப சூழலை எடுத்துக்கொண்டால், பெரும்பாலும் ஆண்களே 'Bread Winner' என ஆங்கிலத்தில் சொல்லப்படும், தன் குடும்பத்திற்கு வேண்டிய பணத்தில் பெருமளவைச் சம்பாதித்துத் தருபவராகவும், குடும்பத்தின் முக்கிய பொருளாதாரம் சார்ந்த ஆதாரமாக விளங்குகிறார்கள். பெண்களோ வீட்டையும், குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்பிலும் இருக்கின்றனர். வெளியே வேலை செய்து கணவர் ஈட்டும் வருமானத்தை கொண்டு அவர்களின் செலவுகள், சேமிப்புகள் போன்ற அனைத்தையும் நிர்வகிப்பது பெரும்பாலும் பெண்களாகவே உள்ளனர். 


மேலும் படிக்க - மகளிர் உரிமைத் தொகை: உங்கள் விண்ணப்பம் ரிஜெக்ட் ஆனதா? எப்படி தெரிந்துகொள்வது?


இது சமூக ஒடுக்குமுறைகளில் ஒன்றாக காணப்பட்டாலும், பெண் விடுதலை, பெண் முன்னேற்றம் சார்ந்தும் பல்வேறு முன்னெடுப்புகள் செயல்படுத்தப்படுகின்றன. தொடக்கக் கல்வி, உயர்கல்வி, சுய தொழில், பேறுகால விடுமுறைகள் என பெண்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கித் தருவதன் மூலம் இதுபோன்ற கட்டுபாடுகளில் இருந்து பெரும்பாலும் வெளிக்கொண்டு வர முடியும். இருப்பினும், கணவனின் வருமானத்தை மட்டும் நம்பியும், தனக்கான குறைவான வருமானத்துடனும் இருக்கும் பெண்கள் அதிகம். எனவே, அவர்களுக்கான முன்னேற்றம் குறித்தும் சிந்தித்தாக வேண்டும் என்ற நோக்கமே, இந்த கலைஞர் பெண்கள் உரிமைத் தொகை திட்டம்.


குடும்பத்தின் முன்னேற்றம்


இந்த திட்டம் என்பது நேரடி பயன் பரிமாற்றம் (Direct Benefit Tranfer) முறையில் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் மாதாமாதம் வரவு வைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் முக்கிய அம்சமே இது தான் என கூற வேண்டும். பொருள்கள், சேவைகள் ஆகியவற்றை இலவசமாகவோ, மானிய விலையிலோ வழங்குவதை விட இது கூடுதல் நன்மைகளை பயனாளிகளுக்கு தரும். தங்களுக்கு தேவையானவற்றை சுயமாக நிவர்த்தி செய்துகொள்ளும் திறன் குடும்பங்களுக்கு அதிகரிக்கும். 


நகரங்களில் உள்ள குடும்பங்களுக்கும் இது பயனளித்தாலும், கிராமப்புற சார்ந்த குடும்பங்களுக்கு இது பெரும் வரப்பிரசாதம் தான். 100 நாள் வேலைகளுக்கு செல்லும் பெண்கள் முதல் விவசாய கூலிகளாக உள்ளவர்களுக்கு இந்த 1000 ரூபாய் என்பது அடிப்படை வசதிகள் முதல் சேமிப்பு வரை பலவேற்றில் பயனளிக்கும். ஏற்கெனவே, பெண்களுக்கான இலவச பேருந்து பயணம், உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கான புதுமைப் பெண் திட்டம் மூலம் மாதாமாதம் 1000 ரூபாய் ஊக்கத்தொகை, பள்ளி மாணவிகளுக்கான இலவச பஸ் பாஸ், சீருடை, காலணி, மதிய உணவு திட்டம் போன்றவறை நேரடியாகவே பெண் சமூகத்திற்கு கொடையாக திகழும் நிலையில், இந்த உரிமைத் தொகையும் அவர்களுக்கான முன்னேற்றப் பாதையில் பெரும் பங்கு வகிக்கும். 


மேலும் படிக்க - பொருளாதார உரிமையும் பெண்களின் விடுதலையும்-கலைஞர் மகளிர் உரிமைத்தொகை செய்த மாற்றம்!


குடும்பத்தின் அடிப்படை தேவைகள்


பொதுவாக, மாத வரவு - செலவு மூலம் தங்களின் வாழ்வாதாரத்தை கவனித்துக்கொள்ளும் லட்சக்கணக்கான குடும்பங்கள் தங்களின் மருத்துவம் மற்றும் உணவு பொருள் சார்ந்த செலவுகளில் கடும் சிக்கனத்தை கடைபிடிப்பார்கள். அதாவது, மற்ற செலவுகளுக்காக மருத்துவத்தை அலட்சியப்படுத்துவதை நீங்கள் நிச்சயம் பார்த்திருப்பீர்கள். மூன்று வேளை உணவில், ஒரு நேரத்தை குறைத்து அதில் சேமிப்பு செய்து கூட மற்ற செலவுகளுக்கு பணத்தை எடுத்துவைப்பார்கள். 


இது இன்று நேற்றல்ல, நீண்ட ஆண்டுகளாக தொடர்ந்து வருபவை. வறுமையை தாண்டினாலும் தங்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்துகொள்வதில் பல குடும்பங்களுக்கு கடும் நெருக்கடியும் நிலவுகிறது. அந்த வகையில், இந்த 1000 ரூபாய் என்பது குடும்பத்தினரின் அடிப்படை தேவைகளில் எவ்வித சமரசமும் செய்யாமல் அதனை முழுமையாக பெற்றுக்கொள்ள அனுமதிக்கும். 


உதாரணமாக, செப். 14ஆம் தேதி கலைஞர் பெண்கள் உரிமைத் தொகை திட்டத்தின்கீழ் பல்வேறு பயனாளிகளின் வங்கி கணக்குகளில் 1000 ரூபாய் செலுத்தப்பட்டது. அதில், பணத்தை பெற்ற பயனாளி ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில்,"1000 ரூபாய் இன்றே வந்துவிட்டது. மிகவும் சந்தோஷமாகவும், உற்சாகமாகவும் உள்ளது. இன்று எனது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை. இந்த 1000 ரூபாய் வைத்து தான் மருத்துவச் செலவுகளை செய்தேன்" என கூறியிருந்தார். இது எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற அரசின் கோட்பாட்டில் பெரும் பாய்ச்சலாக கருதவேண்டும். 


மேலும் படிக்க - 2021 முதல் தற்போது வரை..! முதலமைச்சர் ஸ்டாலின் முத்தாய்ப்பான திட்டங்கள்!


இதர பயன்கள்


வீட்டு வாடகை, மளிகை செலவு, மின்சார கட்டணம் ஆகியவற்றை செலுத்தவதிலும் இந்த 1000 ரூபாய் பெரும்பாலும் பயனடையும் என பெண்கள் கூறுகின்றனர். இதுமட்டுமின்றி, சிறு சேமிப்பு போன்ற திட்டங்களில் கூட இதனை சேமிப்பது அவர்களின் எதிர்கால நலனுக்கு நல்ல முதலீடாகவும் அமையும், சேமிப்பை ஊக்கப்படுத்தும் விதமாகவும் இது அமையும். பெண்களை சுயமாக செயல்பட வைப்பதில் இந்த உரிமைத் தொகை திட்டம் சிறப்பான செயலை ஆற்றும். சமூக ரீதியில் விளிம்புநிலையில் இருக்கும் பெண்கள், கிராமப்புறங்கள் முதல் நகரங்கள் வரை தந்தையின்றி குழந்தைகளை வளர்க்கும் பெண்கள் என அனைவரையும் கவனித்துக்கொண்டு உருவாக்கப்பட்ட திட்டமாக உள்ளது. 


பொருளாதர அறிஞர் அமர்தியா சென் அவரது 'இந்தியாவும் அதன் முரண்பாடுகளும்' என்ற புத்தகத்தில் குறிப்பிட்டதை போல தமிழ்நாட்டின் பொது விநியோக திட்டங்கள் சமூக நீதியில் பெரும் பங்கை வகிக்கிறது. அந்த வகையில், கலைஞர் பெண்கள் உரிமைத் தொகை திட்டமும் சமூக நீதியை நிலைநாட்டுவதிலும், சமத்துவ சமுதாயத்தை அமைப்பதிலும் இது பெரும் முன்னுதாரண திட்டமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.


மேலும் படிக்க - மகளிர் உரிமைத் தொகை: ரூ.1000 செலுத்தும் பணி தொடங்கியது


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ