கள்ளக்குறிச்சியில் பிளஸ்2 மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக, நேற்று நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் பள்ளி மற்றும் போலீஸ் வாகனங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தினர். கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதில், 55 போலீசார் காயமடைந்தனர். இந்நிலையில், அப்பகுதி முழுவதும் பதற்றமான சூழல் நீடித்து வருவதால் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், சம்பவம் குறித்து வழக்குப் பதிந்த காவல்துறையினர், தனிப்படைகள் அமைத்து கலவரத்தில் ஈடுபட்டவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். முதற்கட்டமாக 20 சிறார்கள் உள்ளிட்ட 128 பேரை கைது செய்யப்பட்டனர். அதன்பின்னர், கைது செய்யப்பட்ட 128 பேரும் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அதில், 20 சிறார்கள் செஞ்சி கூர்நோக்கு இல்லத்தில் அடைக்க உத்தரவிடப்பட்டது. மீதமுள்ள 108 பேருக்கு ஆகஸ்டு 1-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனைக்கு பிறகு 108 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 



இந்த நிலையில் மாணவிக்கு நீதி கேட்டு கடலூர் வெள்ளி கடற்கரையில் ஒன்றிணைவோம் என வாட்ஸ்அப் குரூப் மூலம் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டது தெரியவந்தது. அது தொடர்பான விசாரணையில் கடலூர் தனியார் கல்லூரியை சேர்ந்த விஜய் என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் கள்ளக்குறிச்சி வன்முறை தொடர்பாக கடலூரை சேர்நத தினேஷ் கார்த்திக் ஆகியோரையும் கடலூர் போலீஸார் கைது செய்துள்ளனர்.  இதனை தொடர்ந்து கடலூர் வெள்ளி கடற்கரைக்கு மாணவர்கள் இளைஞர்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈட்டுப்பட்டுள்ளனர். 



இதே போல் கடற்கரையோரம் அமைந்துள்ள பெரியார் கலை கல்லூரியில் நுழைவு வாயலில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கடற்கரைக்கு செல்லும் சாலைகளில் போலீசார் தீவிர வாகன தனிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். 


மேலும் படிக்க | உள்ளாடையில் ரத்தக்கறை.. மார்பில் காயங்கள்... அதிர்ச்சி தரும் பிரேத பரிசோதனை அறிக்கை


இதே போல் உயரிழந்த மாணவியின் சொந்த ஊரான வேப்பூர் அடுத்த பெரியநெசலூர் கிராமத்தில் சிலர் போராட்டம் நடத்த உள்ளதாக வந்த தகவலை அடுத்து அவரது வீட்டிற்குச் செல்லும் சாலைகளில் தடுப்பு கட்டைகள் அமைத்து ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 


மேலும் படிக்க | கள்ளக்குறிச்சி கலவரத்துக்கு மாணவியின் தாய்தான் காரணம் - பள்ளி செயலாளரின் ஆவேச வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ