ஆரியக் கோட்பாட்டில் இவ்வளவு பிடிப்பா? - கமல்ஹாசனுக்கு மநீம நிர்வாகி கேள்வி..
மக்கள் நீதி மய்யத்தில் இருந்து ராஜிநாமா செய்துள்ள நிர்வாகி கமல்ஹாசனை கடுமையாக சாடியுள்ளார்.
நடைபெற்ற நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் மாபெரும் தோல்வியை சந்தித்தது. சட்டமன்ற தேர்தலில் கட்சி தோல்வியடைந்தபோது நிர்வாகிகள் பலர் ராஜிநாமா செய்தது போலவே தற்போது கட்சி நிர்வாகிகள் வெளியேறி வருகிறார்கள். அதில் அடுத்தபடியாக இன்று கட்சியின் ஊடகப் பிரிவு மாநில துணை செயலாளர் தொல்காப்பியன் ராஜினாமா செய்துள்ளார். ஆனால் இவர் கமல்ஹாசன் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.
கட்சியின் வியூகங்களை வகுக்க சங்க்யா சொல்யூஷன்ஸ் என்ற நிறுவனத்தை நாடியதையும் அதன் தலைவரான சுரேஷ் ஐயரை கட்சியின் முக்கிய முடிவுகள் எடுக்க அனுமதித்ததையும் தொல்காப்பியன் கடுமையாக விமர்சித்துள்ளார். ஐயர் என்று ஜாதிப் பெயரை சேர்த்துக் கொண்டதன் மூலம் ஆரியக் கோட்பாட்டில் கமல்ஹாசன் அதிக பிடிப்புக் காட்டுவதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
மேலும் படிக்க | ஹெச்.ராஜா மனநோயாளி: மக்கள் நீதி மய்யம்
மக்கள் நீதி மய்யத்தின் லகானை 4 பிராமனர்களிடம் கமல்ஹாசன் கொடுத்து வைத்திருப்பதாக குற்றம் சாட்டியிருக்கும் தொல்காப்பியன், இப்படி பிராமண ஜாதி பெருமை பேசும் நபர்களால் கமல் அவரைச் சுற்றி ஒரு வளையத்தை ஏற்படுத்தி வைத்திருப்பதாகவும் தொல்காப்பியன் கூறியுள்ளார்.
மேலும் படிக்க | ஆளுங்கட்சி அராஜகம் : கமல்ஹாசன் குற்றச்சாட்டு
”கட்சித் தொண்டர்களின் அரசியல் வாழ்வுக்கே கிஞ்சித்தும் பொறுப்பு ஏற்க விரும்பாத உங்களால் இந்த நாட்டு மக்களின் துன்ப துயரங்களுக்கு எவ்வாறு செவி சாய்க்க முடியும்? மக்களின் முனேற்றத்திற்கு உழைக்கும் பொறுப்பான தலைவராக உங்களால் எப்படி செயல்பட முடியும்” என்று கமல்ஹாசனின் தலைமைப் பண்பை கடுமையாக சாடியுள்ளார் தொல்காப்பியன்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR