Makkal Needhi Maiam Website Hacked: மக்கள் நீதி மய்யத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், பல மணிநேரங்கள் கடந்தும் இன்னும் மீட்கப்படவில்லை.
திமுக தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள், பட்ஜெட்டில் திட்டங்கள் ஆகுமா? என்று கேள்வி எழுப்பியுள்ள மக்கள் நீதி மய்யம், பட்ஜெட்டில் தமிழக அரசு 13 திட்டங்களைக் குறிப்பிட்டு அவை எப்போது செயலாக்கம் பெறும் என்பதையும் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சியை விட்டு விலகிய மகேந்திரனை தங்கள் கட்சியில் சேர்க்க பாஜக, திமுக என இரு கட்சிகளுமே முயற்சி செய்தன. கட்சியிலும், மக்களிடமும் மகேந்திரனுக்கு உள்ள செல்வாக்கே இதற்கு முக்கிய காரணமாகும்.
மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருந்த மக்கள் நீதி மய்யம் கட்சி, தேர்தலில் பெரும் ஏமாற்றத்தை சந்தித்தது. இதைத் தொடர்ந்து, மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து மகேந்திரன், சந்தோஷ் பாபு, முருகானந்தம் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் கட்சியை விட்டு விலகினர்.
மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், சட்டசபை உறுப்பினர்களாக பதவியேற்ற அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மக்கள் நீதி மய்யத்தில் ஜனநாயகமே இல்லை என்றும் தேர்தலில் பெற்ற தோல்விக்குப் பிறகும் கூட கமல்ஹாசனின் அணுகுமுறையில் எந்த மாற்றமும் இல்லை என்றும், இந்த காரணங்களால் தான் கட்சியில் இருந்து விலகுவதாக மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் பிஜேபியின் வானதி சீனிவாசன் வெற்றி, MNM கமலஹாசன் தோல்வி. இன்று காலையில் தொடங்கியது முதலே வானதிக்கும், கமலஹாசனுக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் சொற்ப எண்ணிக்கையிலேயே இருந்தது