செஸ் தொடர்களில் மிகப்பெரிய தொடராக கருதப்படுவது செஸ் ஒலிம்பியாட். 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியானது மாமல்லபுரத்தில் இன்று (ஜூலை 28) தொடங்கி ஆகஸ்ட் 10ஆம் தேதிவரை நடக்கிறது. இதனையொட்டி தமிழக அரசு சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளது. அரசின் ஏற்பாடுகள் சர்வதே செஸ் வீரர்கள் பலரை கவர்ந்துள்ளது. இன்று செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. இதில் பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர்,அனுராக் தாக்கூர் எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அவரது மகள் ஐஸ்வர்யா, கவிஞர் வைரமுத்து, நடிகர் கார்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

44ஆவது செஸ் ஒலிம்பியாட்  தீபத்தை கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் ஏந்திவந்து முதல்வர் முக ஸ்டாலினிடம் கொடுத்தார். அதை இளம் கிராண்ட் மாஸ்டர்கள் பிரக்ஞானந்தா, குகேஷ் உள்ளிட்டோர் வாங்கி விழா அரங்கில் அமைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய ஒலிம்பிக் ஜோதியை ஏற்றினர்.


 



இதனையடுத்து, நடிகர் கமல்ஹாசனின் பின்னணி குரலில் தமிழ்நாட்டின் கலாசார வளர்ச்சி குறித்த நிகழ்த்துக்கலை நடைபெற்றது. பல ஆண்டுகளுக்கு முன் மயிலாடும்பாறையில் தமிழர் கலை, கலாசாரம் செழித்து இருந்ததற்கான சான்று முதலாம் நூற்றாண்டில் கரிகால சோழன் கல்லணை கட்டியது குறித்து முப்பரிமாண படத்துடன் விளக்கமளிக்கப்பட்டது. கமல் ஹாசனின் குரலில் தமிழர்களின் கலாசார வளர்ச்சி அரங்கில் இருந்த அனைவரையும் பூரிப்படைய செய்தது.



முன்னதாக விழா மேடையில் பேசிய மு.க. ஸ்டாலின், “பிரதமர் நரேந்திர மோடிக்கு செஸ் மிகவும் பிடித்த விளையாட்டு. அவர் குஜராத் முதலமைச்சராக இருந்தபோது 20000 செஸ் வீரர்களை வைத்து மிகப் பெரிய போட்டியை நடத்தினார். இது போன்ற வாய்ப்புகளை தொடர்ந்து தமிழகத்துக்கு தரவேண்டும்” என்று கோரிக்கை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | வாய்ப்புகளை தமிழகத்துக்கு கொடுங்கள் - செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ