கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி கலாச்சார சீரழிவு: ஜெயக்குமார்!
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், அதிமுக தொண்டர்களின் காலை பிடிப்பதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சரமாரி விமர்சனம்!!
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், அதிமுக தொண்டர்களின் காலை பிடிப்பதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சரமாரி விமர்சனம்!!
சென்னை ராயபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் (Jayakumar), மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை கடுமையாக விமர்சித்தார். அப்போது, திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பதால், கமல்ஹாசன் (Kamal Haasan) தானாகத்தான் திருந்த வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். மேலும், புதுக்கட்சி தொடங்க உள்ள ரஜினி, திமுகவின் உண்ணாவிரதப் போராட்டம் ஆகியவற்றையும் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளதாவது... MGR-யை அதிமுகவினர் மட்டும் தான் உரிமை கொண்டாட முடியும். அவரின் பெயரை பயன்படுத்தி அதிமுகவினரின் (AIADMK) காலை பிடிக்கிறார் கமல்ஹாசன். அவர் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு கலாச்சார சீரழிவு எனக் கடுமையாக விமர்சித்தார். மேலும், லஞ்சம் பெறும் அரசு அதிகாரிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
ALSO READ | ஈகோவை விட மக்கள் நலன் தான் முக்கியம்.. ரஜினி பக்கம் சாயும் கமல்!
சட்டமன்றத் தேர்தலுக்கான பரப்புரையின் போது, “MGR மடியில் வளர்ந்தவன் நான். அவர் எங்களின் சொத்து. பேனரில் அவரது போட்டோவை சிறியதாக போட்டவர்கள் எல்லாம் இப்போது என்னை எதிர்க்கிறார்கள்” எனக் கூறியிருந்தார்.
கமல்ஹாசன் MGR-யை சொந்தம் கொண்டாடுவது அதிமுகவினர் மத்தியில் எதிர்ப்பை கிளப்பியிருக்கிறது. MGR பெயரைச் சொல்லி அதிமுக வாக்குகளை கமல்ஹாசன் கலைக்க பார்ப்பதாக அவர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இத்தகைய சூழலில் MGR பெயரை பயன்படுத்தி கமல், அதிமுகவினர் காலை பிடிப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னர் இந்த நிகழ்ச்சி குறித்து விமர்சித்த முதல்வர் (Edappadi Palaniswami) கூறியதாவது... "பிக்பாஸ் பார்த்தால் ஒரு குடும்பம் கூட நல்லா இருக்காது. நல்லா இருக்கிற குடும்பத்தைக் கெடுப்பதுதான் அவர் வேலை. அந்தத் தொடரைப் பார்த்தால் குழந்தைகளும் கெட்டுப்போகும், நல்லா இருக்கும் குடும்பமும் கெட்டுப்போய்விடும்" என்று அவர் விமர்சித்துள்ளார்.
ALSO READ | சட்டப்பேரவை தேர்தலில் கட்டாயம் போட்டியிடுவேன், தொகுதி பின்னர் அறிவிக்கப்படும்: கமல்
இதற்குப் பதிலளித்த கமல், "முதல்வரும் பிக்பாஸ் பார்க்கிறார் என்பது மகிழ்ச்சியளிக்கிறது" என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார்.
உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR