மாவட்ட நிர்வாகத்தின் அதிரடியால் காஞ்சிபுரத்தில் நிகழ்ந்த மாற்றம்! லாரிகளில் நோ ஓவர் லோட்!
Kancheepuram Lorry Owners Oath : காஞ்சிபுரத்தில் கனரக லாரிகளில் இனி ஓவர் லோட் போட மாட்டோம் என பதாகைகள் வைத்து கவனத்தை ஈர்த்த கல்குவாரி மற்றும் லாரி உரிமையாளர்கள்!
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆற்பாக்கம்,மாகரல், திருமுக்கூடல்,மதூர், இறையனார் வேலூர், உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான கல் குவாரிகள்,கல் அரவை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றது. இந்த குவாரிகள் மற்றும் கல் அரவை நிலையங்களில் இருந்து தினந்தோறும் 8 முதல் 16 சக்கரங்களை கொண்ட பல நூறு கனரக வாகனங்கள் வந்து கட்டுமானத்திற்கு தேவையான பொருட்களை காஞ்சிபுரம், செங்கல்பட்டு,சென்னை புறநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு எடுத்துச் செல்கின்றன.
பயணிக்கும் தூரம் அதிகம் ஆனால் வருமானம் குறைவு என்ற காரணத்தால் கல்குவாரிகள் மற்றும் கனரக லாரிகள் அரசு விதிமுறைகள் மீறி அதிக பாரங்களை ஏற்றி செல்வதை வாடிக்கையாகவே வைத்துள்ளன. இதனால், தார் சாலைகள் சேதமடைவது, விபத்துகள் ஏற்படுத்துவது, மாசு அதிகிரிப்பு உள்ளிட்ட பல்வேறு சிரமங்களை சந்தித்து வருவதாக பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் தொடர் புகார் அளித்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து, தமிழக அரசின விதிமுறைகள் மீறி செயல்படக்கூடாது என நோக்கில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை இனை இயக்குனர் வேடியப்பன் தலைமையில் கல்குவாரி உரிமையாளர்கள், அரவை நிலைய உரிமையாளர்கள், லாரி உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் தமிநாட்டின் காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம் வாகன விபத்துகளை தவிர்ப்பது குறித்து பல்வேறு ஆலோசனை வழங்கினார். இதில் அவர் பேசுகையில்,அதிக பாரம் ஏற்றுவதால் சாலை சேதத்தை விட அதிகப்படியான உயிர் சேதம் ஏற்படுகிறது.அதிகப் பாரம் ஏற்றுவதால் வாகனத்தின் எடை அதிகம் கூடி வாகன இயக்குவதில் சிரம்ம ஏற்படுகிறது என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க | வயிற்று பிழைப்பிற்காக சென்ற மீனவர்களை சிறை பிடித்த இலங்கை கடற்படை!
மேலும், உரிய நேரத்தில் பிரேக் பிடிக்காமலும்,வேகத்தை கட்டுப்படுத்த முடியாமலும் போகிறது இதனால் தான் அதிகளவு உயிர் சேதமாகிறது என்றும் தார்ப்பாய் மூடாமல் அதிகப்படியான பாரம் ஏற்றி செல்வதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர் என்பதையும் சுட்டிக்காட்டினார்.
தார்பாய் மூடாமல் செல்வதால் மாசு ஏற்படுகிறது, அதிலிருந்து சிதறும் கற்களால் வாகன ஓட்டிகளுக்கு விபத்துகளும் ஏற்படுகிறது. கனரக வாகனங்களில் அதிகப்பாரம் ஏற்றுவதற்காக வாகனங்களில் சட்டத்திற்கு புறம்பான வகையில் உருமாற்றம் செய்யக்கூடாது,வாகனத்திற்க்கு ஏற்ற வகையில்தான் பாரம் ஏற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
வாகன தணீக்கையில் ஈடுப்படும் அதிகாரிகளிடம் எடை போட மறுத்தல், முறையான ஆவணங்களை தர மறுத்தாலும், அதிக பாரம் ஏற்றினாலும் அபராதம் மற்றும் தண்டனைகளும் வழங்கப்படும் என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, உரிமையாளர்களும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள். இந்த கூட்டத்தில் லாரிகளுக்கு அதிக பாரம் ஏற்ற அனுமதிக்க கூடாது என கல அரவை நிலையங்களும்,அதிக பாரங்களை ஏற்ற மாட்டோம் என லாரி உரிமையாளர்களும் ஒரு மனதாக முடிவெடுத்தனர்.
அதன் தொடர்ச்சியாக, எடுத்த முடிவை பின்பற்றும் வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெருவாரியான கல்குவாரிகள்,அரவை நிலையங்களின் வாயில் முன்பாக இங்கு ஓவர் லோடு போட மாட்டோம் என பதாகைகள் வைத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளனார். இதனை முறையாக பின்பற்றினாலே,பெருமளவு விபத்துக்கள்,அதிகளவான மாசுக்கள்,சாலை சேதம், போக்குவரத்து நெரிசல் உள்ளிட்டவை குறைக்கப்படும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும்,அரசு ஆலோசனை பொதுமக்கள் கோரிக்கைகள் ஏற்று உடனடியாக இதனை செயல்படுத்தும் இத்துறையினரின் செயல் தொடர்ச்சியாக இருப்பின் விபத்திலா தமிழகம் , சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில் பசுமை காஞ்சியை உருவாகும் என்பது நிதர்சனமே.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ