“எதுக்கு புரியாம பேசுற?” கடுப்பான கனிமொழி-நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன..?
டெல்லி நாடாளுமன்றத்தில் இன்று, எம்.பி கனிமொழியை பாஜகவினர் பேச விடாமல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்து திமுக எம்.பி கனிமொழி பேசுவதற்கு முன்னர், பாஜகவினர் அமளியில் ஈடுபட்டனர், தன்னை பேசவிடாமல் செய்தவர்களுக்கு கனிமொழி தமிழிலேயே பதிலடியும் கொடுத்தார். இந்த சம்பவம் டெல்லி முதல் தமிழ்நாடு வரை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் டெல்லி நாடாளுமன்றத்தில் நடைப்பெற்றாது. மக்களவையில் நேற்று, சட்டசபை மற்றும் நாடாளுமன்றத்த்தில் பெண்களுக்கு 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்க மசோதா தாக்கல் செய்யப்பட்டது. பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா குறித்த விவாதம் இன்று நடைப்பெற்றது. இந்த விவாதத்தின் போது, முன்னதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி பேசினார். அப்போது, முன்னாள் இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் ராஜ்யசபாவில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை கொண்டு வந்திருந்ததாகவும் ஆனால் தற்போது கொண்டு வரப்பட்டுள்ள மசோதா இது இல்லை என்றும் குறிப்பிட்டு பேசினார். இவரையடுத்து பாஜக கட்சியை சேர்ந்த நிஷிகாந்த் துபே பேசினார்.
கனிமொழியை பேச விடாமல் செய்த பாஜகவினர்..
பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா குறித்து திமுக எம்.பி கனிமொழி மூன்றாவதாக பேசுவதற்காக அழைக்கப்பட்டார். அப்போது, ‘இந்தியா’ கூட்டணி அமைப்பை சேர்ந்த எம்.பிக்கள் அவருக்கு மேஜையை தட்டி வரவேற்பு அளித்தனர். அவர் எழுந்து நின்று, மக்களவை சபா நாயகருக்கு நன்றி தெரிவித்தார். கனிமொழி தொடர்ந்து பேசுவதற்குள் அவரை பேச விடாமல் பாஜகவினர் திடீர் முழக்கங்கள் எழுப்பினர். பின்னர் கூச்சலிட்டு அமளியில் ஈடுபட்டனர்.
கடுப்பான கனிமொழி..
பாஜகவினர் கனிமொழியை பேச விடாமல் செய்தது, திமுக எம்.பிக்களுக்கு கோபத்தை வரவழைத்தது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய உறுப்பினரும், அக்கட்சியின் எம்.பியுமான சுப்ரியா சுலே கோபமடைந்தார். “அவர்களுக்கு அப்படி என்ன அவசரம்..?” என்றும் கேள்வியெழுப்பினார். கனிமொழியும் சபாநாயாரை ஓம் பிர்லாவை நோக்கி “என்ன சார் இது..?” என்று ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பினார். இவருக்கு ஆதரவாக சுப்ரியா சுலேவும் பேசினார். பாஜகவினரின் இந்த செயல் கனிமாெழியை கடுப்பாக்கியது.
தமிழில் பேச்சு..
கனிமொழியை பேச விடாமல் செய்த பாஜகவினரின் செயல் சபா நாயகர் உள்பட பலரின் பொறுமையை சோதித்தது. இதையடுத்து, கனிமொழி ஆங்கிலத்திலும் தமிழிலும் பாஜகவினரை நோக்கி கண்டனம் தெரிவித்தார். “நீங்க என்ன பேசினாலும் புரியாது. ஏன் புரியாம பேசுற..?” என்று பாஜகவினரை நோக்கி கேள்வியெழுப்பினார். பாஜகவினரின் அமளி சிறிது நேரம் தொடர்ந்தது, இதையடுத்து சபாநாயகர் அவர்களை உட்காரச்சொன்னார்.
கனிமொழி பேச்சு:
பாஜகவினர் ஒரு வழியாக அமைதியானதை தொடர்ந்து, கனிமொழி தனது பேச்சை தொடங்கினார். அப்போது மகளிர் இட ஒதுக்கீடு என்பது இந்திய பெண்களுக்கான சலுகை அல்ல, அது பெண்களின் உரிமை என்று தெரிவித்தார். இந்த மசோதாவை திமுகவினர் ஆதரிப்பதாகவும் ஏற்பதாகவும் பாஜக இதை அரசியலாக்குவதாகவும் குறிப்பிட்டார். 1996ஆம் ஆண்டு ஆட்சி செய்த பிரதமர் தேவகவுடா இதே மசோதாவை கொண்டு வந்தருந்ததாகவும் அதை திமுக உள்ளிட்ட பல கட்சிகள் ஆதரித்ததாகவும் கனிமொழி தெரிவித்தார்.
மேலும் படிக்க | சீமான் பாலியல் புகார்: காவல்துறை பதில் அளிக்க உத்தரவு.. செப்டம்பர் 26 தள்ளி வைப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ