பிரபல நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக, சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காங்கிரஸ் தலைவர்கள் பலர் கள நிலவரம் தெரியவில்லை என்றும், உணமை நிலை தெரியாமல், உத்தரவுகளை இஷ்டத்திற்கு பிறப்பிக்கின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

அவர் பாஜகவில் இணைய உள்ளதாக கடந்த சில வாரங்களாக செய்திகள் வெளியான நிலையில் குஷ்புவின் ராஜினாமா கடிதம் அதனை உறுதிபடுத்தியுள்ளது.



தனது அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார். 


டெல்லிக்கு பயணம் மேற்கொண்ட் குஷ்புவிடம், பாஜக வில் இணைவதற்காக சேருகிறீர்களா என கேட்டத்தற்கு, கருத்து ஏதும் கூற மறுத்து விட்டார்.


இந்த நிலையில் அகில இந்திய செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து குஷ்புவை நீக்கப்படுவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. 


முன்னதாக, காங்கிரஸ் கட்சியில் பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்து வந்த குஷ்பு கடந்த சில மாதங்களாக மென்மையான போக்கை காடைபிடித்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. புதிய கல்வி கொள்கை தொடர்பாக அவர் ஆதரவான கருத்துக்களை பதிவிட்டு, அதனை வரவேற்றார். ட்விட்டரில் பாஜக தலைவர்களுக்கு வாழ்த்து  கூறினார். அதற்கு காங்கிரஸ் தலைவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.


ஆரம்பத்தில் திமுகவில் இருந்த குஷ்பு, எம்எல்ஏ, எம்பி சீட் கிடைக்கும் என நினைத்தார். ஆனால், குடும்ப கட்சியான திமுகவில் எதிர்பார்த்த சீட் கிடைக்கவில்லை.


அதனால், காங்கிரசுக்கு சென்றார். ஆனால், இவரை மாநில காங்கிரஸ் தலைமை பதவி  கூட கிடைக்கவில்லை. எம்பி தேர்தலில் சீட் தந்தால் நிற்பேன் என்று தன் ஆசையை வெளிப்ப்டையாக சொல்லியும், காங்கிரஸ் சீட் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


குஷ்பு காங்கிரஸ் இருந்து விலகுவதால் காங்கிரசுக்கு எந்த இழப்பும் இல்லை.குஷ்புவை பாஜகவினர் யாரும் அழைக்கவில்லை, அவரே தான் பாஜகவுக்கு செல்கிறார்.காங்கிரஸ் கட்சியில் இருந்த போதும் கொள்கை பிடிப்புடன் செயல்படவில்லை என காங்கிரஸ் தலைவர், கே.எஸ்.அழகிரி ட்வீட் செய்துள்ளார்.


ALSO READ | திரிபுரா முதல்வர் பிப்லப் தேப்ற்கு எதிராக 7 MLAக்கள் போர்கொடி.. பதவி தப்புமா!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYe