நவரத்திரி பண்டிகை இன்று தொடங்கிய நிலையில், ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதை அடுத்து,  அக்டோபர் 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை கொண்டாட இருக்கும் நிலையில் சென்னையில் இருந்து வெளியூர் செல்பவர்களுக்கு வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசின் போக்குவரத்து துறை அறிவித்துள்ளது


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிறப்பு பேருந்துகள் வரும் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். 


கொரானா  பரவுவதை தடுக்கும் நோக்கில், பேருந்தில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்க,  12.10.2021 மற்றும்‌ 18.10.2021 ஆகிய நாட்களில்‌ சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம், தாம்பரம்‌ இரயில்‌ நிலைய பேருந்து நிலையம், ‌பூந்தமல்லி பேருந்து நிலையம் ஆகியவற்றில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்


பேருந்து நிலையம்‌ மற்றும்‌ சிறப்பு பேருந்துகளின்‌ விவரம்‌ :


1. தாம்பரம்‌ இரயில்‌ நிலைய பேருந்து நிலையத்தில் இருந்து கிளம்பும் பேருந்துகள்: திண்டிவனம்‌ மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும்‌ பேருந்துகள்‌, திண்டிவனம்‌ வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர்‌, சிதம்பரம்‌, காட்டுமன்னார்கோயில்‌ செல்லும்‌ பேருந்துகள்‌, சேத்துபட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும்‌ பேருந்துகள்‌ மற்றும்‌ திண்டிவனம்‌ வழியாக புதுச்சேரி, கடலூர்‌, சிதம்பரம்‌ செல்லும்‌ பேருந்துகள்‌.


2. பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து வேலூர்‌, ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர்‌, காஞ்சிபுரம்‌, செய்யாறு, ஒசூர்‌, திருத்தணி மற்றும்‌ திருப்பதி செல்லும்‌ பேருந்துகள் இயக்கப்படும்.


3. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து மேற்குறிப்பிட்டுள்ள ஊர்களை தவிர இதர ஊர்களுக்கு செல்லும்‌ பேருந்துகள்‌ இயக்கபடும். மயிலாடுதுறை, தஞ்சாவூர்‌, கும்பகோணம்‌, திருவாரூர்‌, திருத்துறைப்பூண்டி, நாகப்பட்டிணம்‌, வேளாங்கண்ணி, அரியலூர்‌, ஜெங்கொண்டம்‌, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர்‌,  கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல்‌, விருதுநகர்‌, நாகர்கோவில்‌, கன்னியாகுமரி, விழுப்புரம்‌,திருப்பூர்‌, ஈரோடு, ஊட்டி, இராமநாதபுரம்‌, சேலம்‌, கோயம்புத்தூர்‌ மற்றும்‌ பெங்களூரூ ஆகியவை இதில் அடங்கும். 


மேற்கண்ட இடங்களுக்கு கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இணைப்பு பேருந்துகள்‌ மாநகர்‌ போக்குவரத்துக்‌ கழகம்‌ மூலம்‌ இயக்கப்படும்‌. பயணிகள்‌ கண்டிப்பாக முகக்கவசம்‌ அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


ALSO READ | கொரோனா குறைந்தபின் தான் கோயில் திறப்பு : அமைச்சர் சேகர்பாபு


ALSO READ | குபேரனுக்கு வட்டி கட்டும் பணக்கார கடவுள் திருப்பதி பெருமாள்  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G