Kodanad Murder Case: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அடுத்து தடயவியல் துறையினர் மற்றும் காவல்துறையினரிடம் விசாரிக்க இருப்பதாக அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கபட்டுள்ளது. அதனை தொடர்ந்து ஆகஸ்ட் 26-ந்தேதிக்கு ஒத்தி வைக்கபட்டது. கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு பங்களாவில் கடந்த 2017-ஆம் ஆண்டு கொலை கொள்ளை சம்பவம் நடைபெற்றது. அதில் தமிழக முன்னாள் முதல்வர்  ஜெயலலிதவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ், சயான், வாளையாறு மனோஜ் உள்ளிட்ட 11 பேர் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது. அதில் கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். இதனையடுத்து சயான் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகளாக சேர்க்கபட்டு விசாரணை நடைபெற்று வந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த வழக்கில் புதிய திருப்பமாக தனிபடை போலிசார் கூடுதல் விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் உறவினர் ரமேஷ் ஆகியோருக்கு தொடர்ப்பு இருப்பது தெரிய வந்ததால் அவர்கள் இருவரும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.


கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை கொடநாடு மேலாளர் நடராஜன், ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி, அதிமுக பிரமுகர் சஜீவன் என இறுதி கட்டத்தை எட்டி உள்ள நிலையில், இந்த வழக்கு விசாரணை உதகையில் உள்ள மாவட்ட மகிளா நீதிமன்றயில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சயான், வாளையாறு மனோஜ், ஜம்சீர் அலி, ஜித்தின் ஜாய் ஆகியோர் மட்டுமே நீதிமன்றத்தில் ஆஜராகினர்.


மேலும் படிக்க: OPS vs EPS : கடைசி அஸ்திரம்., பிரம்மாஸ்திரம் : கோடநாடு வழக்கை கையில் எடுக்கும் ஓபிஎஸ்


வழக்கு விசாரணைக்கு அஜரான அரசு தரப்பு வழக்கறிஞர்கள் சாஜகான் மற்றும் கனகராஜ் உள்ளிட்டோர் தனிபடை போலிசார் இது வரை 267 பேரிடம் விசாரித்துள்ளதாகவும், கேரளாவில் கொரோனா தொற்று அதிகமாக இருப்பதால் பாலக்காடு அருகே வாகன விபத்தில் உயிரிழந்த சயானின் மனைவி, மகள் இறப்பு குறித்து தடயங்களை சேகரிக்க முடியவில்லை என்றும் கனகராஜின் விபத்தில் உயிரிழந்த வழக்கின் புலன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர்.


மேலும் வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை எட்டி உள்ளதால் கொடநாடு கொலை கொள்ளை வழக்கை தொடக்கத்தில் விசாரித்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் தடயவியல் துறையினரிடமும் விசாரிக்க முடிவு  செய்யபட்டுள்ளதாக தெரிவித்தனர். அதனை நீதிபதி பதிவு செய்து கொண்டதுடன் வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 26-ந்தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.


மேலும் படிக்க: கோடநாடு வழக்கை CBI-க்கு மாற்ற கோரிய மனுவை தள்ளுபடி செய்தது SC


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ