சென்னை: COVID-19 நோயாளிகளிடமிருந்து அதிக தொகை வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அலகிரி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தனியார் மருத்துவமனைகளை (Private Hospitals) கட்டுப்படுத்த மாநில அரசு தவறிவிட்டதாக குற்றம் சாட்டிய அழகிரி "அமைச்சர்கள் அரசாங்க மருத்துவமனைகளுக்கு பதிலாக தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துக்கொண்டால் எவ்வாறு நடவடிக்கைகள் சரியாக எடுக்கப்படும்?" என்று கேள்வி எழுப்பினார்.


தனியார் மருத்துவமனைகள் 9,000 ரூபாய் முதல் 15,000 ரூபாய் வரை வசூலிக்கலாம் என தமிழக அரசாங்கம் (Tamil Nadu Government) பரிந்துரைத்திருந்தாலும், பல தனியார் மருத்துவமனைகள் மிக அதிக தொகையை வசூலிக்கிறார்கள் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். கார்ப்பரேட் மருத்துவமனைகள் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 50,000 ரூபாய் வசூலிக்கின்றன. நோயாளிகள் சிகிச்சைக்கு 6 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை செலவழிக்க வேண்டி இருக்கிறது என்று குறிப்பிட்டார்.


ALSO READ: PM Kisan விவசாயிகள் நலத்திட்ட ஊழலில் CBI விசாரணை தேவை: தமிழக விவசாயிகள்


தனியார் மருத்துவமனைகள் வசூலிக்கும் தொகையைப் பார்த்தால் இது பகல் கொள்ளையைப் போல் உள்ளது அழகிரி மேலும் கூறினார்.


இந்தப் பிரச்சினையைத் தீர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தவறினால், அது மருத்துவமனைக் கட்டணங்கள் தொடர்பான தனது சொந்தக் கொள்கையையே அரசாங்கம் மீறுவதைப் போலாகும் என்றார் அவர்.


தொற்றால் பாதிக்கப்படும் அமைச்சர்கள் மற்றும் பிரபலங்கள் அரசாங்க மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துக்கொண்டால்தான் மக்களுக்கும் அங்கு அளிக்கப்படும் சிகிச்சையின் மீது நம்பிக்கை ஏற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.


ALSO READ: அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் தலா 5000 ரூபாய் வழங்க வேண்டும்: MKS