நடிகர் மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி! என்னாச்சு?
Mansoor Ali Khan : வேலூர் மாவட்டம். நடிகரும் வேட்பாளரமான மன்சூர் அலிகான் தனியார் மருத்துவமனையில் அனுமதி
Mansoor Ali Khan : வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் சுயேட்சையாக பலாப்பழ சின்னத்தில் போட்டியிடும் இந்திய புலிகள் ஜனநாயக கட்சி தலைவர் மன்சூர் அலிகான் திடீர் உடல்நல குறைவு காரணமாக குடியாத்தத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி.
என்ன நடந்தது?
நடிகர் மன்சூர் அலிகான், இந்திய புலிகள் கட்சி சார்பாக பலாப்பழ சின்னத்தில் வேலூர் தொகுதியில் போட்டியிடுகிறார். நாடாளுமன்ற தேர்தல் நாளை நடைபெற உள்ளதை அடுத்து, இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரங்கள் நிறைவடைகின்றன. இதையடுத்து அரசியல் கட்சியை சேர்ந்த வேட்பாளர்களும் அரசியல் கட்சி தலைவர்களும் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
நடிகர் மன்சூர் அலிகான், இன்று காலை முதல் ஆம்பூர் வாணியம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் பரப்பரை மேற்கொண்டு விட்டு குடியாத்தம் பகுதியில் பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு, தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சுயேட்சையாக போட்டியிடும் மன்சூர் அலிகான்:
நடிகர் மன்சூர் அலிகான், வேலூர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறார். இது குறித்து பிரச்சாரம் மேற்கொண்டு வந்த அவர், தான் ஆள்பலம், பணபலம் என எதுவும் இன்றி தனியாக இந்த தேர்தலில் போட்டியிடுவதாகவும், இதே தொகுதியில் 198ஆம் ஆண்டு பள்ளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஜனாப் அப்துல்சமது என்பவர் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்றதாகவும் கூறினார்.
மேலும் படிக்க | பிரதமர் மோடிக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் எழுப்பியிருக்கும் 30 கேள்விகள்!
அந்த பள்ளிப்பட்டிதான் தனக்கு சொந்த ஊர் என்று பேசிய மன்சூர் அலிகான், மக்கள் தனக்கு நன்றாக ஆதரவு அளித்து வருவதாகவும் இத்தேர்தலில் 50 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்றும் கூறியிருக்கிறார்.
தேர்தல் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மன்சூர் அலிகான்:
நேற்று முன் தினம், மன்சூர் அலிகான் தேர்தல் பரப்புரையின் போது தேர்தல் நிலை கண்காணிப்புக் குழு அதிகாரிகள் பிரச்சார வாகனத்தை மரித்து சோதனை செய்ய முற்பட்டதால் மன்சூர் அலிகான் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கே.வி.குப்பம் அடுத்த சேத்துவண்டை பகுதியில் திறந்த வெளி வாகனத்தில் பரப்புரை மேற்கொண்டிருந்தார்.
அப்பொழுது மன்சூர் அலிகான் வந்த வாகனத்தை தேர்தல் நிலை கண்காணிப்பு குழு அதிகாரிகள் வேகமாக வந்து பிரச்சார வாகனத்தை வழி மறித்து நிறுத்தி வாகனத்தை சோதனை செய்ய முற்பட்டனர் அப்போது வாகனத்தில் இருந்த மன்சூர் அலிகான் கள்ளக் கடத்தல் கடத்துபவர்கள் காரை நிறுத்துவது போல் நிறுத்துகிறீர்கள், வந்து இருப்பவர்கள் முறையான தேர்தல் நிலை கண்காணிப்பு குழு அதிகாரிகளா இல்லை போலியானவர்களா என்று பாருங்கள், என்னை சோதனை செய்வது போல திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை சென்று சோதனை செய்யுங்கள் பார்க்கலாம் என்றும் வந்திருப்பவர்களை புகைப்படம் எடுங்கள் என்றும் தெரிவித்தார் உடனே தேர்தல் நிலை கண்காணிப்பு குழு அதிகாரிகள் மன்சூர் அலிகான் பரப்புரை மேற்கொண்ட வாகனத்தை புகைப்படம் எடுத்து அங்கிருந்து காரை எடுத்துக்கொண்டு சென்று விட்டனர் இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ