சிவகங்கையில் முந்தும் தேவநாதன்? கார்த்தி சிதம்பரம் மீது மக்கள் அதிருப்தியா? கள நிலவரம் என்ன?

 Sivaganga Lok Sabha Constituency Prediction 2024: மொத்தமாக 14 முறை மக்களவைத் தேர்தலை சந்தித்த சிவகங்கைத் தொகுதியில் 8 முறை தேசிய காங்கிரஸ், 2 தமிழ் மாநில காங்கிரஸ், 2 முறை திமுக, 2 முறை அதிமுக வெற்றி பெற்றுள்ளது.

Written by - JAFFER MOHAIDEEN | Last Updated : Apr 17, 2024, 12:47 PM IST
  • சிவகங்கை மாவட்ட கள நிவரம் என்ன?
  • காங்கிரஸ்-பாஜக நேரடி போட்டி
  • பிரச்சார யுக்தியில் முந்திச்செல்லும் பாஜக.
சிவகங்கையில் முந்தும் தேவநாதன்? கார்த்தி சிதம்பரம் மீது மக்கள் அதிருப்தியா? கள நிலவரம் என்ன? title=

Sivaganga Lok Sabha Constituency Prediction 2024: தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் இரு தினங்களே  உள்ளது.  தமிழகத்தின் இறுதி கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.  தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் சிவகங்கை மக்களவை தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மீண்டும் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுகிறார். ஆனால் இவர் கடந்த முறை வெற்றி பெற்றும் மக்களுக்கு எந்த உதவியும், நலத்திட்டமும் செய்யவில்லையாம். தொகுதி பக்கம் கூட வரவில்லை என மக்கள் குமுறுகின்றனர். அதோடு காங்கிரஸ் கட்சியினரே இவருக்கு சீட் ஒதுக்கப்பட்டதுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கட்சிக்காக உழைப்பவர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல், காங்கிரஸ் கட்சியையே கேலி செய்து ட்வீட் செய்யும் கார்த்தி சிதம்பரத்துக்கு சீட் கொடுப்பதா என கொதித்தனர்.  மேலும் கார்த்தி சிதம்பரம் கடந்த முறை வெற்றி பெற்றாலும்  தொகுதி மக்களைச் சந்திக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இதனால் சிதம்பரம் நேரடியாக சிக்கலை சந்தித்து வருகிறார். அவரது வெற்றி வாய்ப்பும் கேள்விக்குறிதான் என்கிறது கள நிலவரம். 

மொத்தமாக 14 முறை மக்களவைத் தேர்தலை சந்தித்த சிவகங்கைத் தொகுதியில் 8 முறை தேசிய காங்கிரஸ், 2 தமிழ் மாநில காங்கிரஸ், 2 முறை திமுக, 2 முறை அதிமுக வெற்றி பெற்றுள்ளது.

சிவகங்கை மாவட்டம்: இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில்லை

சிவகங்கை மாவட்டத்தில் விவசாயம் மற்றும் அது சார்ந்த தொழில்கள் பிரதானமாக உள்ளன. சிவகங்கை தொகுதி தொழில் வளர்ச்சியில் பின்தங்கியிருப்பதால் அங்கு படித்த இளைஞர்கள் வேலைக்காக வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களை நோக்கியே செல்ல வேண்டியிருக்கிறது. 

காங்கிரஸ்-பாஜக நேரடி போட்டி

ஜி.கே.வாசன்,  டிடிவி தினகரனின் கட்சிகள் பாஜகவிற்கு ஆதரவாக உள்ளதால் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் மற்றும் பாஜக-விற்கு இடையில் நேரடி போட்டி உருவாகி உள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் அதன் கூட்டணிக் கட்சியான இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தேவநாதன் யாதவ் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் கல்லல் ஒன்றியச் செயலாளரான சேவியர் தாஸ், நாம் தமிழர் கட்சியின் சார்பில் எழிலரசி போட்டியிடுகிறார். இதில் காங்கிரஸ், பாஜக கட்சி இடையே கடும் போட்டி நிலவுகிறது.

சிவகங்கையில் உள்ள சமூக வாக்குகள்

சிவகங்கை மாவட்டத்தைப் பொறுத்தவரை முக்குலத்தோர், யாதவர்,  உடையர், சிறுபான்மையினர் கிறிஸ்தவர், இஸ்லாமியர்கள், செட்டியார் சமூக வாக்குகள் அதிகம் இருக்கின்றன. 

மேலும் படிக்க | வேலூரில் மீண்டும் உதிக்குமா உதயசூரியன்? கருத்துக் கணிப்பில் மாஸ் காட்டிய கதிர் ஆனந்த்! விவரம் என்ன?

கட்டமைப்பை வலுப்படுத்தியுள்ள பாஜக

பாஜக-விற்கு கடந்த தேர்தலின்போது உட் கட்டமைப்பு பெரிய அளவில் இல்லை. ஆனால் இந்த முறை அக்கட்சி தொகுதியில் உள்ள அனைத்து பூத்துகளிலும் பணியாட்களை அமர்த்தி வேலை செய்து வருகின்றது. மேலும், சிவகங்கையில் 2 லட்சத்திற்கும் அதிகமான யாதவர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் இருப்பதால் அவர்களின் கணிசமான வாக்குகள் பாஜக சார்பில் போட்டியிடும் தேவநாதன் யாதவிற்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமமுக, ஓபிஎஸ், தமிழ் மாநில காங்கிரஸ் ஆதரவாளர்களும் இங்கே இருப்பதால் காங்கிரசுக்கு கடும் நெருக்கடியைக் கொடுத்து வெற்றி வாய்ப்பைப் பெறுவதற்கான வாய்ப்புகள் தேவநாதனுக்கு உள்ளது.  சிவகங்கை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரம் தொகுதிக்கு எந்த நல்ல திட்டங்களைக் கொண்டு வரவில்லை. 

பிரச்சார யுக்தியில் முந்திச்செல்லும் பாஜக

இந்த முறை பிரதமர் மோடிக்கு  எதிரான அலை என்பது பெரிய அளவில் இல்லை. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்களின் செயல்பாடு, மோடி அரசின் விவசாயிகளுக்கு பயிர்காப்பீடு திட்டம், ரூ.6000 நிதி, குறைந்த விலையில் உரம் என விவசாயிகள் சார்ந்த நலத்திட்டங்கள் நேரடியாக விவசாயிகளை சென்றடைந்துள்ளதால் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி பாஜகவின் வசமாக மாறியுள்ளது. மேலும் தேவநாதனின் பிரச்சார யுக்தி கிராமம் தோறும் வாக்குசேகரிப்பு, குறிப்பாக யாதவர்களின் ஆதரவு என களத்தில் முந்தி செல்கிறது. 

சிவகங்கையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தேவநாதன் சாதிப்பாரா? அல்லது மக்கள் கார்த்தி சிதம்பரத்திற்கு மீண்டும் ஒரு வாய்ப்பை அளிப்பார்களா? ஜூன் 4-ம் தேதி தெரிந்துவிடும்!!

மேலும் படிக்க | TASMAC Leave : நாடாளுமன்ற தேர்தலால் டாஸ்மாக் லீவ்! மது கடைகளில் நிரம்பி வழிந்த கூட்டம்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News