பிரதமர் மோடிக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் எழுப்பியிருக்கும் 30 கேள்விகள்!

Minister Mano Thangaraj's 30 Questions to PM Modi: 10 ஆண்டுகளில், மோடியின் பிரதமர் பதவி எதற்கு பயன்பட்டது? என்ற தலைப்பில் அமைச்சர் மனோ தங்கராஜ் 30 கேள்விகளை எக்ஸ் பக்கத்தில் எழுப்பியுள்ளார். 

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 16, 2024, 06:06 PM IST
  • பிரதமர் மோடிக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி
  • கடந்த 10 ஆண்டுகளாக பிரதமர் பதவியை எதற்கு பயன்படுத்தினார் மோடி?
  • மணிப்பூர் கலவரம் முதல் கருப்பு பணம் வரை 30 கேள்விகள்
பிரதமர் மோடிக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் எழுப்பியிருக்கும் 30 கேள்விகள்! title=

தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் 2024 பிரச்சாரம் ஏப்ரல் 17 ஆம் தேதி நாளை மாலையுடன் நிறைவடைகிறது. இதனையொட்டி தேர்தல் பிரச்சாரம் சமூக ஊடகம் முதல் தேர்தல் களம் வரை சூடுபிடித்துள்ளது. தமிழ்நாட்டில் ஆளும் கட்சியான திமுக, மத்திய பாஜக அரசை குறி வைத்து கடுமையான பிரச்சாரத்தை மேற்கொண்டிருக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பல்வேறு கேள்விகளை பிரதமர் மோடிக்கு எழுப்பியிருக்கும் நிலையில், அமைச்சர் மனோ தங்கராஜூம் 30 கேள்விகளை முன்வைத்துள்ளார்.

அமைச்சர் மனோ தங்கராஜ் எக்ஸ் பக்கத்தில், " #ElectoralBond மூலம் பாஜக கொள்ளையடிக்கவும், பணக்கார நண்பர்களுக்கு காண்ட்ராக்ட் பெற்று தர நாடுநாடாக சுற்றவும், கட்சிக்கு கமிஷன் வாங்கவும், 7.5 லட்சம் கோடி ஊழல் செய்யவும், கொரோனா நேரத்தில் பாத்திரங்களை தட்டவும், போட்டோ ஷூட் நடத்தவும் பயன்பட்டதே தவிர, வேறு எதற்கு பயன்பட்டது?

மேலும் படிக்க | மோடி ஆட்சிக்கு வந்தால் தங்கம் விலை 1 லட்சம் ரூபாயாக உயரும் - திண்டுக்கல் சீனிவாசன்

1. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை குறைக்க பயன்பட்டதா? #PetrolDieselPrice
2. சீன ஆக்கிரமிப்பை தடுக்க பயன்பட்டதா?
3. SC/ST மக்கள் மீதான தாக்குதல்களை தடுக்க பயன்பட்டதா?
4. கொரோனா லாக்-டவுனில் வட-மாநில தொழிலாளர்கள் 500-1000 கிமீ தூரம் நடந்து சென்றவர்களுக்கு உதவ பயன்பட்டதா?
5. கொரோனா நேரத்தில் மக்களின் பசியாற்ற பயன்பட்டதா?
6. விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய பயன்பட்டதா?
7. விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாக்க பயன்பட்டதா?
8. ஏழை மக்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து வங்கிகள் பிடுங்கிய 35000 கோடியை தடுக்க பயன்பட்டதா?
9. 7.5 லட்சம் கோடி #Corruption நடக்காமல் இருக்க பயன்பட்டதா?
10. பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் குடியரசு தலைவரை அழைக்க பயன்பட்டதா?
11. 1 லட்சம் விவசாயிகளின் தற்கொலையை தடுக்க பயன்பட்டதா?
12. 1 லட்சம் மாணவர்களின் தற்கொலைகளை தடுக்கப் பயன்பட்டதா?
13. மணிப்பூர் கலவரத்தை தடுக்கப் பயன்பட்டதா?
14. பாஜகவிற்கு 230கோடி தேர்தல் பத்திரம் வழங்கிய வேதாந்தாவின் ஸ்டெர்லைட்டில் நடைபெற்ற தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை தடுக்க பயன்பட்டதா?
15. மழை, புயல், வறட்சி போன்ற பேரிடர் நேரங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ பயன்பட்டதா?
16. நீரவ் மோடி, மெகுல் சோக்சி, விஜய் மல்லையா, போன்று வங்கிகளை ஏமாற்றியவர்கள் வெளிநாட்டுக்கு தப்பியோடாமல் தடுக்க பயன்பட்டதா? அல்லது தப்பியோடியவர்களை பிடிக்க பயன்பட்டதா?
17. கொரோனாவால் நட்டத்தில் மூழ்கிய சிறுகுறு #MSME தொழில்களுக்கு உதவ பயன்பட்டதா?
18. மீனவர் பிரச்சனைகளில் தீர்வு காண பயன்பட்டதா?
19. ஊழலை ஒழிக்க பயன்பட்டதா?
20. ஸ்விஸ் வங்கி கருப்பு பணத்தை மீட்க பயன்பட்டதா?
21. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பளிக்க பயன்பட்டதா?
22. போதைப்பொருள் கடத்தலை தடுக்க பயன்பட்டதா?
23. போலிச் செய்திகளையும், வெறுப்பு பிரச்சாரங்களையும் தடுக்க பயன்பட்டதா?
24. பில்கிஸ் பானுவிற்கு நீதி வழங்க பயன்பட்டதா?
25. #Manipur பெண்களின் மானத்தை பாதுகாக்க பயன்பட்டதா?
26. #AirIndia-வை தனியாருக்கு விற்காமல் தடுக்க பயன்பட்டதா?
27. ஏழை இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க பயன்பட்டதா?
28. #India-வின் இயற்கை வளங்களை அதானிக்கும், வேதாந்தாவிற்கும் விற்காமல் இருக்க பயன்பட்டதா?
29. டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பை உயர்த்த பயன்பட்டதா?
30. குறைந்தபட்சம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவாவது பயன்பட்டதா?

மக்கள் நலன் எதற்குமே பயன்படவில்லை எனில், பதவி நாற்காலியை இறுகப்பிடித்துக் கொண்டிருப்பது ஏன்?" என்று கேள்விகளை சரமாரியாக எழுப்பியுள்ளார்.

மேலும் படிக்க | தமிழ்நாட்டின் நாடாளுமன்ற தொகுதிகளை குறைக்க மோடி சதித்திட்டம் - முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News