BJP Candidate Tamilisai Soundararajan Online Campaign 2024 :  பாஜக கட்சியின் முக்கிய உறுப்பினரும், புதுச்சேரியின் முன்னாள் லெப்டினன்ட் கவர்னருமான தமிழிசை செளந்தரராஜன் ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டிருக்கிறார். அதில், தான் மக்களுடன் Zoom மீட்டிங்கில் உரையாடிக்கொண்டிருக்கையில் சிலர் வேண்டுமென்றே ஆபாச படங்களை பரப்பி விட்டதாக கூறியிருக்கிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழிசையின் ட்வீட்:


வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழிசை செளந்தரராஜன், பாஜக கட்சி சார்பாக தென் சென்னை தொகுதியில் போட்டியிடுகிறார். இதையடுத்து பிரதமர் மோடி ரோடு ஷோ வந்திருந்த சமயத்திலும், அதன் பிறகும் சூறாவளி பிரச்சாரங்களை மேற்கொண்டார். இதையடுத்து, இணைய வழியிலும் மக்களை தொடர்பு கொண்டு தனக்கு வாக்களிக்குமாறு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், அவர் பிரச்சாரம் மேக்கொள்கையில் நடைப்பெற்ற அனுபவம் ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்து கொண்டுள்ளார். 



“ஆபாச படம் காட்டினர்..”


இந்த சம்பவம் குறித்து தமிழிசை செளந்தரராஜன் வெளியிட்டிருக்கும் பதிவில், “Zoom மீட்டிங்கில் மக்களுடன் உரையாடிக் கொண்டிருக்கும் போது சில விஷமிகள் ஆபாசமான செயல்களில் ஈடுபட்டனர்” என்று குறிப்பிட்டிருக்கிறார். 


இந்த ட்விட்டர் பதிவிற்கு ஒரு சில நெட்டிசன்கள் சேட்டையாக ரிப்ளை செய்திருக்கின்றனர். 


“அண்ணாமலை மேல டவுட்டு..”


பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தனக்கும் தனது கட்சிக்கும் எந்த வகையிலாவது விளம்பரம் தேவை என்பதற்காக சில விஷயஙட்களை செய்வார் என மக்கள் கருதுகின்றனர். இதனால், இது போன்ற செயலை அவர் செய்திருக்க கூடும் எனக்கூறி சில நெட்டிசன்கள் நகைச்சுவையாக பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். 



என்ன நடந்தது? 


அடுக்குமாடி குடியிருப்பு வாசிகளிடம் பிரசாரத்தை முன்னெடுக்கும் விதமாக ஜூம் மீட்டிங் ஒன்றை அவர் கடந்த ஏப்ரல் 14-ம் தேதி ஏற்பாடு செய்துள்ளார்.. அதில், தமிழிசை சௌந்தரராஜன் உடன் அடுக்குமாடி குடியிருப்புவாசிகளில் சிலர் கலந்துகொண்டனர். அப்போது திடீரென ஆபாச வீடியோ ஒளிபரப்பப்பட்டதாக கூறப்படுகிறது.


மேலும் படிக்க | அண்ணாமலைய கேளுங்க அப்புறம் எங்கள கேட்கலாம் - டென்ஷன் ஆன நாம் தமிழர் தம்பிகள்!


இதனால்,  மீட்டிங்கில் கலந்துகொண்டவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதைத் தொடர்ந்து அந்த வீடியோ மீட்டிங் உடனடியாக ரத்து செய்யப்பட்டது.  இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதியுள்ள தமிழிசை சௌந்தரராஜன்,``  Zoom மீட்டிங்கில் மக்களுடன் உரையாடிக் கொண்டிருக்கும் போது சில விஷமிகள் ஆபாசமான செயல்களில் ஈடுபட்டனர். இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன். ஆபாசமான படங்களை Zoom மீட்டிங்கில் பரவ விட்டு உடனே நான் அவர்களோடு பேசுவதை தடுத்துவிட்டார்கள்” என்று காட்டமாக பதிவிட்டிருந்தார். இதனுடன் வீடியோ ஒன்றையும் அவர் இணைத்துள்ளார். 


அதில், அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் வாக்காளர்களிடத்தில் எனக்கு ஆதரவு தருமாறு கேட்க திட்டமிட்டேன். அவர்களை நேரில் சந்திக்க முடியவில்லை என்பதால்,  Zoom மீட்டிங் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த மீட்டிங்கில் பல முக்கிய பிரச்சனைகள் குறித்து பேச முடிவெடுத்தேன். ஆனால் அதற்குள் ஆபாசமான படங்கள் அதில் பகிரப்பட்டன. இதன் மூலம் வேட்பாளருக்கும், வாக்காளர்களுக்கும் இடையிலான அந்த மீட்டிங் ரத்தானது. என வேதனையுடன் பேசியுள்ளார். தான் தாமரை சின்னத்துக்கு வாக்கு கேட்கக்கூடாது என்ற மோசமான நோக்கில் எதிர்க்கட்சியினர் இப்படி செய்ததாக கூறினார். 


அதோடு இந்த செயலுக்கு காரணம் திமுக என்றும், இதற்கு நேரடியாக திமுக மீது குற்றம் சுமத்துவதாகவும் அவர் பேசியுள்ளார். இது கேவலமான அரசியல் என்றும் அவர் வசை பாடியுள்ளார். இந்த சம்பவத்தால் தமிழிசை செளந்தர்ராஜன் கடும் அப்செட் ஆனதாக கூறப்படுகிறது.


மேலும் படிக்க | தமிழ்நாட்டின் நாடாளுமன்ற தொகுதிகளை குறைக்க மோடி சதித்திட்டம் - முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ