புதுடில்லி: கொரோனா வைரஸ் (Corona Virus) நம்மைச் சுற்றி இன்னும் உள்ளது என்பதும், அது தினமும் அதிகமாகிக்கொண்டிருக்கின்றது என்பது உண்மைதான். நிலைமை பழைய பாணிக்கு திரும்ப இன்னும் நீண்ட நேரம் ஆகலாம். மக்கள், ஜிம், கிளப் போன்ற எந்தவொரு பொது இடத்திற்கும் செல்ல மிகவும் அஞ்சுகிறார்கள்.
இத்தகைய சூழ்நிலையில், உடற்பயிற்சி, பிற பயிற்சிகள், கற்பித்தல், DJ இசை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் போன்றவர்களுக்கு பிரச்சினை அதிகரித்துள்ளது. இப்போது இந்த நபர்களை மனதில் வைத்து, வீடியோ மீட்டிங் செயலியான ஜூம் (Zoom), OnZoom என்ற ஒரு புதிய ஆன்லைன் நிகழ்வு தளத்தை கொண்டு வந்துள்ளது.
உடற்பயிற்சி, கற்பித்தல் மற்றும் ஆன்லைன் கேதரிங் தொழிலுடன் தொடர்புடையவர்களுக்கு இந்த புதிய செயலி உதவியாக இருக்கும்.
உங்கள் வணிகத்திற்கு புதிய அடையாளத்தைக் கொடுங்கள்
உங்கள் வணிகத்தை ஆன்லைனில் வளர்க்க விரும்பினால், வீடியோ சந்திப்பு செயலியான Zoom -இன் புதிய ஆன்லைன் நிகழ்வு தளமான OnZoom -ஐப் பயன்படுத்தலாம். இந்த புதிய தளத்தின் மூலம், கட்டண பயனர்கள் உடற்பயிற்சி வகுப்புகள், இசை நிகழ்ச்சிகள், ஸ்டாண்டப்கள் மற்றும் இசை பாடங்கள் போன்ற நிகழ்வுகளை நடத்தலாம். இவற்றின் ஹோஸ்டாக இருந்து இவற்றை நடத்தலாம். இவற்றால் பணம் ஈட்டலாம். இந்த புதிய தளத்தின் மூலம், விருப்பமுடையோர் தங்கள் வணிகத்தை வளர்த்து, புதிய பார்வையாளர்களையும் சென்றடையலாம்.
ALSO READ: குறைந்த விலையில் iPhone வாங்க இதுதான் சரியான time: குறைக்கப்பட்ட Price list இதோ!!
எங்கள் கூட்டாளர் வலைத்தளமான zeebiz.com இன் படி, Zoom, பயனர்களுக்கு புதிய தளத்தைப் பயன்படுத்த பல வசதிகளை வழங்கியுள்ளது. உதாரணமாக, அவர்கள் இதில் டிக்கெட்டுகளை பரிசாக வழங்கலாம். மேலும் பங்குபெறுவோரின் ஒரு டேஷ்போர்டையும் உருவாக்கலாம். செயலியை மிகவும் பாதுகாப்பானதாக்க, Zoom, இரண்டு காரணி அங்கீகார அம்சத்தை (Two Factor Authentication) வெளியிட்டுள்ளது. இந்த அம்சத்தின் உதவியுடன், குறிப்பாக ஆன்லைன் வகுப்புகள் (Online Classes) அல்லது பள்ளி-கல்லூரியின் கூட்டங்களின் போது ஹேக்கிங்கைத் தடுக்கலாம். இரண்டு காரணி அங்கீகாரம் வெவ்வேறு பயனர்களுக்கு வேறுபட்டிருக்கலாம்.
இதற்கு பாஸ்வர்ட் அல்லது PIN ஐப் பயன்படுத்தலாம் அல்லது ஸ்மார்ட் கார்டு, மொபைல் சாதனம், கைரேகை சென்சார், குரல் போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.
புதிய தளத்தின் சேவைகள் அமெரிக்க பயனர்களுக்கு அமெரிக்க Beta-வில் கிடைக்கின்றன என்று Zoom கூறியுள்ளது. இந்தியா-சீனா தகராறு (India China Standoff) அதிகரித்தபோது இந்தியாவில் Zoom பயன்பாட்டை தடை செய்வது குறித்து பேச்சு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அதன் பிறகு அரசாங்கம் இது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை.
ALSO READ: WOW….TV பார்ப்பவர்களுக்கு Good News! உங்களைத் தேடி வருகின்றன amazing offers!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR