உயிரே போனாலும் நீட்டை ரத்து பண்ண முடியாது - அண்ணாமலை!
நீட் என்பது எங்களுடைய கொள்கையின் முழக்கம். கிராம புறத்தில் கிராமபுரத்தில் ஒரு ஏழை தாயின் குழந்தை நீட் மூலமாக மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரிக்கு போக முடியும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
மக்களவை தேர்தல் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு பல கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வந்த நிலையில், இன்று தான் பிரச்சாரத்தின் கடைசி நாள். எனவே, கடைசி நாளான இன்று அனைத்து கட்சி தலைவர்களும் இறுதி கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கோவையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் செய்தார். அப்போது எங்களுடைய உயிரே போனாலும் நீட் தேர்வை மட்டும் ரத்து செய்யவே முடியாது என்று கூறியுள்ளார். கோவையில் பிரச்சாரம் செய்தபோது அண்ணாமலை மக்கள் கேள்வுக்கும் பதில் அளித்தார். அப்போது ஒரு பெண்மணி நீட் தேர்வை ரத்து செய்வீர்களா? என்பது போல கேள்வியை கேட்டுள்ளார்.
அந்த கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை, எங்கள் உயிரே போனாலும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது. நீட் தேர்வு என்பது மக்களுக்கு ரொம்பவே நல்லது. முதன் முதலாக ஏழை மக்கள் நீட் தேர்வு மூலமாக அரசு மருத்துவ கல்லூரிக்கு செல்கிறார்கள். திமுக 1967 -ஆம் ஆண்டில் இருந்து தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்ததது ஐந்தே ஐந்து மருத்துவக்கல்லூரி தான். 17 தனியார் மருத்துவக்கல்லூரி தான். ஆனால், நாங்கள் 15 அரசு மருத்துவக்கல்லூரியை கொண்டு வந்து இருக்கிறோம். எங்களுடைய நோக்கமே ஏழை மக்கள் போட்டி (neet) தேர்வு மூலமாக சமூக நிதியோட மருத்துவக்கல்லூரிக்கு செல்லவேண்டும். நீட் தேர்வை எடுத்துவிட்டு தான் நாங்கள் அரசியலில் இருக்கவேண்டும் என்றால் அப்படிபட்ட அரசியலே எங்களுக்கு வேண்டாம். எல்லா மக்களும் நீட் தேர்வை ஏற்றுக்கொள்கிறார்கள்.
நீட் என்பது எங்களுடைய கொள்கையின் முழக்கம். கிராம புறத்தில் கிராமபுரத்தில் ஒரு ஏழை தாயின் குழந்தை நீட் மூலமாக மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரிக்கு போக முடியும். இல்லையென்றால் எங்கே போவீர்கள் டி ஆர் பாலுனுடைய மருத்துவக் கல்லூரி, பாலாஜி மெடிக்கல் காலேஜ், ஆகியவற்றிற்கு செல்வீர்கள் ஒரு கோடி பணம் கொடுத்து எத்தனை பேரால் படிக்க முடியும்? பணம் இருப்பவர்கள் படிப்பார்கள்.
ஏழைத்தாயின் மகன், மகள் நீட் மூலமாக மட்டும்தான் அரசு மருத்துவக் கல்லூரிக்கு போக முடியும் ஆனால் நீட்டை எந்த காரணத்துக்காகவும் எடுக்க மாட்டோம். மாணவர்களை இறப்புக்கு தூண்டுகிறார்கள். மாணவர்கள் இறப்பதற்கு ஸ்டாலின் ஐயாவை பிடித்து உள்ளே வைத்தால் எந்த தற்கொலையும் நடைபெறாது. நான் தமிழ்நாட்டில் காவல்துறையில் இருந்தேன் என்றால் உடனடியாக FIR போட்டு முதல் குற்றவாளியாக முதல்வர் ஸ்டாலினை உள்ளே தள்ளி இருப்பேன்” என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ