சாதிய கொலை வழக்கு! கணவன் கொலை-மனைவி தற்கொலை..மனதை உலுக்கிய கடைசி கடிதம்..
Chennai Caste Killing Sharmila Suicide : பள்ளிக்கரணையில் சாதிய மறுப்பு திருமணம் செய்த கணவர், கடந்த மாதம் கொலை செய்யப்பட்டதை அடுத்து, அவரது மனைவி தற்கொலை செய்து கொண்டார்.
Chennai Caste Killing Sharmila Suicide : உலகம் எவ்வளவோ முன்னேறிய பிறகும், இன்றும் ஒரு சாதி விட்டு வேறு சாதியில் திருமணம் செய்பவர்களை சிலர் அவர்களின் கெளரவத்திற்காக கொலை செய்யும் சம்பவங்கள் நடைப்பெற்று வருகிறது. அப்படி, சமீபத்தில் நடைப்பெற்ற கொலை சம்பவம்தான் தற்போது தமிழகத்தில் பேசு பொருளாக உள்ளது.
சாதிய மறுப்பு திருமணம் செய்த ஜோடி!
கடந்த பிப்ரவரி மாதம், சென்னை பள்ளிக்கரணையில், டாஸ்மாக் கடை முன்பு இளைஞர் ஒருவரை நான்கு பேர் சேர்ந்து சரமாரியாக அரிவாளால் வெட்டி தாக்கினர். இதில் படுகாயமடைந்த அந்த இளைஞர் மருத்துவமனைக்கு எடுத்து செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்த வழக்கு விசாரணையில், உயிரிழந்த இளைஞரின் பெயர் பிரவீன் என்பதும் இவருக்கு 22 வயதாகிறது என்பதும் தெரிய வந்தது.
கூடவே, இவர் ஜல்லடியன்பேட்டை பகுதியை சேர்ந்த ஷர்மி என்ற 19 வயது பெண்ணை காதலித்ததும், இவர்களின் காதலுக்கு பெண் வீட்ட்டார் எதிர்ப்பு தெரிவித்ததும் தெரிய வந்தது. இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு ஷர்மியை அவர்கள் வீட்டாரின் சம்மதம் இல்லாமல்க் பிரவீன் திருமணம் செய்து கொண்டுள்ளார். பிரவீன் வேறு சாதியை சேர்ந்தவர் என்பதால் இந்த திருமணத்திற்கு பெண் வீட்டார் சம்மதம் தெரிவிக்காததாக கூறப்படுகிறது. திருமணம் முடிந்த பின்பு, ஷர்மியின் வீட்டார் கடும் கோபத்தில் இருந்ததாகவும் இந்த வெறுப்பின் காரணமாக ஷர்மியின் அண்ணன் தினேஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து பிரவீனை தீர்த்துக்கட்டியுள்ளதும் தெரிய வந்தது.
மனைவி தற்கொலை:
2 மாதங்களுக்கு முன்பு நடந்த இந்த கொலை சம்பவம், தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த நிலையில், பிரவீனின் மனைவி ஷர்மிளா கணவனை இழந்த் சோகம் தாளாமல் இருந்துள்ளார். ஏப்ரல் மாதம் ஏப்ரல் 14ஆம் தேதியன்று, ஷர்மிளா தற்கொலை முயற்சி செய்துள்ளார். இவரை மீட்ட குடும்பத்தார், மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதையடுத்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு இவர் நேற்று (ஏப்ரல் 22) மாற்றப்பட்டிருக்கிறார். அங்கு, இவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் போயிருக்கிறது. நேற்றிலிருந்தே ஆபத்தான நிலையில் இருந்த ஷர்மிளா இன்று உயிரிழந்திருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
காரணம் என்ன?
ஷர்மிளா, தனது கணவின் கொலை வழக்கை போலீஸார் தீவிரமாக விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி வந்துள்ளார். இது குறித்த நடவடிக்கைகள் எடுக்கப்படாத காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என ஷர்மிளாவின் குடும்பத்தார் தரப்பில் கூறப்பட்டது. சிபிசிஐடி போலீஸார் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என ஷர்மிளாவின் குடும்பத்தார் வலியுறுத்தி வருகின்றனர்.
பிரவீனின் கொலை வழக்கில், இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) 302பிரிவு மற்றும் பிறபடுத்தப்பட்டோருக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பிரிவு சட்டத்தின் கிழ் மூவர் கைது செய்யப்பட்டிருந்தனர். போலீஸாரின் அலட்சியம் காரணமாக தற்போது ஷர்மிளா உயிரிழந்துள்ளதாக கூறியுள்ள பிரவீனின் தாயார், ஷர்மிளாவின் பெற்றோர் மற்றும் சகோதரருக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார்.
தாம்பரம் காவல் நிலையத்தில் அவர் கொடுத்திருக்கும் புகாரில், போலீஸார் ஷர்மிளாவின் குடும்பத்தினருக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் சார்ஜ் குற்றப்பத்திரிகையில் (Charge Sheet) ஷர்மிளாவின் பெற்றோர் மற்றும் சகோதரரின் பெயரை அவர்கள் குறிப்பிடவில்லை என்றும் கூறியிருக்கிறார். இது, ஷர்மிளாவை கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக குறிப்பிட்டிருக்கிறார். ஷர்மிளாவின் சகோதரர் தினேஷ் ஏப்ரலில் பெயிலுக்கு விண்ணப்பித்ததாகவும் இது, தங்களுக்கு தெரியப்படுத்தப்படவில்லை என்றும் அவர் தன் புகாரில் குறிப்பிட்டிருக்கிறார். இதனால், இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றாக்கோரியும் அவர் தனது புகாரில் குறிப்பிட்டிருக்கிறார்.
கடிதம் சிக்கியது..
ஷர்மிளா, தற்கொலை செய்வதற்கு முன்னர் எழுதியுள்ள கடிதம் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த கடிதத்தில், தனது கணவர் சென்ற இடத்திற்கே தானும் செல்வதாகவும், தன் சாவுக்கு காரணம் துரைகுமார், சரளா, நரேஷ் உள்ளிட்டோர்தான் காரணம் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இது குறித்து பாேலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
(தற்கொலைக்கு முயல்வது எதற்கும் முடிவல்ல: தற்கொலை எண்ணங்கள் எழுந்தால், சினேகா அமைப்பின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்புக் கொள்ளலாம். மேலும், தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104 க்கும் தொடர்புகொண்டு நீங்கள் பேசலாம்.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ