தமிழ்நாட்டில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் லீவு! தேதியை குறிச்சு வச்சுக்கோங்க

Tasmac Holiday announcement: லோக்சபா தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் நான்கு நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 8, 2024, 07:44 PM IST
  • தமிழ்நாட்டில் நான்கு நாட்களுக்கு டாஸ்மாக் லீவு
  • ஏப்ரல் 17,18,19 மூன்று நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை
  • ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை அன்றும் லீவு
தமிழ்நாட்டில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் லீவு! தேதியை குறிச்சு வச்சுக்கோங்க title=

தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல்

2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி அதிமுக, திமுக, பாஜக தலைமையிலான கூட்டணி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. வாக்குப்பதிவுக்கு இன்னும் இரண்டு வாரங்களுக்கும் குறைவாகவே இருப்பதால் வாக்குசேகரிப்பை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன. இந்த தீவிர வாக்குசேகரிப்பு ஏப்ரல் 17 ஆம் தேதி மாலையுடன் நிறைவடைகிறது. 18 ஆம் தேதி தேர்தல் பிரச்சாரம் இருக்காது, அன்றைய தேதியில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டு ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

மேலும் படிக்க | பிரதமர் மோடி வருகை! சென்னையில் போக்குவரத்து அதிரடி மாற்றம் - தெரிஞ்சுக்கோங்க மக்களே

தேர்தல் கண்காணிப்பு தீவிரம்

இதனையொட்டி தேர்தல் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் தேர்தல் கண்காணிப்பு பணிகளும் சோதனைகளும் மும்முரமாக நடைபெறுகிறது. இது குறித்து சென்னையில் பேட்டியளித்த தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, " தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக இதுவரை 88.12 கோடி ரூபாயும், 4.53 கோடி ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்காக ஏப்ரல் 8 ஆம் தேதி திங்கட்கிழமை காலை 11 மணி வரை 2 கோடியே 8 இலட்சத்து 59 ஆயிரத்து 559 கோடி வாக்காளர்களுக்கு (33.46%) பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளது. 

சிறப்புக்குழு விசாரணை

தாம்பரத்தில் 4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாகத் தேர்தல் சிறப்புக் குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேர்தல் நேரத்தில் ஒரு கோடிக்கு மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்டால் அது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளச் சிறப்புக் குழு அமைக்கப்படும். அதன்படி செலவின பார்வையாளர் விசாரணை அறிக்கையைச் சமர்ப்பித்ததும், இந்தியத் தேர்தல் ஆணையம் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கும்.

ஜூன் 4 ஆம் தேதி வரை நடத்தை விதிகள் அமல்

ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நிறைவடைந்தாலும், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஆவணம் இல்லாமல் கையில் ரொக்கமாக வைத்திருந்தால், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4ம் தேதி வரை பறிமுதல் செய்யப்படும். அதேபோல், விக்கிரவாண்டி தொகுதி காலியாக இருப்பதாக மாவட்ட தேர்தல் அதிகாரி கொடுத்த அறிக்கை இந்தியத் தேர்தல் ஆணையத்திற்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்த்து விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்துவது குறித்து இந்தியத் தேர்தல் ஆணையம் முடிவு செய்யும்." என கூறினார்.

டாஸ்மாக் கடைகளுக்கு லீவு

இந்நிலையில், தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளுக்கு நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பிரச்சாரம் நிறைவடையும் ஏப்ரல் 17 ஆம் தேதி, 18, 19 ஆகிய தேதிகள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4 ஆம் தேதியும் டாஸ்மாக் கடை செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க - கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டுவதில் தான் கமிஷன் அடிக்க முடியும் - பாஜக அண்ணாமலை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News