இரண்டாவது முறையாக ராஜ்யசபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உதகை வந்தார், அவருக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பளித்தனர் உதகை சேரிங்கிராஸ் பகுதியில் நடைபெற்ற பேரணியிலும் எல் முருகன் கலந்து கொண்டார்.  அதன் பின்பு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், பிரதமர் மோடி இந்தியாவை மிகவும் வளர்ந்த நாடாக மாற்றியுள்ளார் என்றும் எண் மண் எண் மக்கள் தமிழக யாத்திரையில் பாரதப் பிரதமர் கலந்து கொண்டு நிறைவு செய்து வைத்தார். என் மண் என் மக்கள் யாத்திரை தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது தமிழகத்தில் பாஜக முக்கிய கட்சியாகவும் வளர்ந்து கொண்டிருக்கும் கட்சியாகவும் உள்ளதாக கூறினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | தேசம் காப்போம் தமிழை வளர்ப்போம்: திருச்சியில ஐஜேகே மாநாடு... திரளாக கூடிய மக்கள்


இந்தியப் பிரதமரின் வளர்ச்சி பாதையை மக்கள் விரும்புகிறார்கள் இதனால் பிரதமருக்கு மக்கள் தரும் ஆதரவை நேரில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். தமிழகத்தில் திமுக தோல்வியுற்ற ஆட்சியை கொடுத்துக் கொண்டுள்ளது ஆட்சியை நடத்த தெரியாத குரங்கு கையில் பூமாலை கொடுத்தது போல ஆட்சி செய்து வருகின்றனர் திமுகவின் முக்கிய நிர்வாகி போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார், கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார். இது தமிழகத்திற்கு பெரிய தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ ராசா 2ஜி ஊழல் வழக்கில் தமிழகத்திற்கு தலைக்குனிவை ஏற்படுத்தி இருக்கிறார். அதேபோல நீலகிரி மாவட்டத்தைச் சார்ந்த சுற்றுலாத்துறை அமைச்சர் கா ராமச்சந்திரன் பொதுமக்களுக்கு சாலை அமைப்பதற்கு பதிலாக தனக்கு சொந்தமான ரெசார்ட்டுக்கு சாலை அமைத்துள்ளதாக கூறிய எல் முருகன், திமுகவைச் சார்ந்த 11 அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு நடைபெற்றது வருவதாக கூறினார்.


தமிழகத்தில் நடைபெற்று வரும் திமுக ஆட்சி மக்களை ஏமாற்றுகின்ற லஞ்சம் வாங்குகின்ற மக்கள் பணத்தை சுரண்டுகின்ற ஒரு தோல்வியுற்ற ஆட்சியாக இருப்பதாக குற்றம் சாட்டினார். குறிப்பாக மக்களை போதைக்கு அடிமையாக்குகின்ற செயலில் திமுக கட்சியைச் சார்ந்த நிர்வாகிகளும் விடுதலை சிறுத்தை கட்சியை சார்ந்த நிர்வாகிகளும் போதை கடத்தலில் தொடர்பு கொண்டிருப்பதாகவும், அதனை மக்கள் பார்த்துக் கொண்டிருப்பதாகவும், அதற்கு நாடாளுமன்ற தேர்தலில் சரியான பாடத்தை புகட்டுவார்கள் என்றார். திமுக கூட்டணியில் நடிகர் கமலஹாசனின் மக்கள் நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்துள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, லோக்சபா தேர்தலில் கமலஹாசன் கட்சி தனியாக போட்டியிட்டால் தோல்வி அடைந்து விடுவோம் என்ற அச்சத்தில் திமுக கூட்டணிக்கு சென்றுள்ளதாக கூறிய எல் முருகன், கடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக வேட்பாளரிடம் மண்ணை கவ்வியதாகவும் கமல்ஹாசன் பாஜகவிற்கு ஒரு பொருட்டே இல்லை என்றார்.


நடிகர் விஜய் புதிய கட்சி தொடங்கி இருப்பது குறித்து கேட்டபோது அதனை வரவேற்பதாக கூறிய எல் முருகன் ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சியை தொடங்கலாம் என்றார். பாஜக கூட்டணியில் ஓ பன்னீர்செல்வம் இணைவாரா என்று கேட்டதற்கு தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும் என்றார். போதை பொருட்கள் குஜராத்தில் இருந்து தமிழகத்திற்கு கடத்தப்பட்டு வருவதாக காங்கிரஸ் தலைவர் குற்றம் சாட்டி இருப்பது குறித்து கேட்டபோது இந்தியாவிற்கு போதை பொருட்கள் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராக் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருவதாகவும், அதனை குஜராத் போலீசாரம் மத்திய போதை தடுப்பு பிரிவினரும் விழிப்புடன் பிடித்து வருவதாகவும் கூறினார்.


மகளிர் தினத்தன்று மகளிர்க்கு பரிசு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் கேஸ் விலையை பாரத பிரதமர் நரேந்திர மோடி குறைத்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் மகளிர் மேம்பாட்டிற்கு மட்டும் மூன்று புள்ளி ஐந்து கோடி வீடுகள் கட்டி தந்திருப்பதாகவும் நாடு முழுவதும் கழிப்பிடங்கள் கண்டித்து கொடுக்கப்பட்டிருப்பதாகவும் 11 கோடி பேருக்கு இலவச கேஸ் இணைப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் 400 ரூபாய் வீதம் கேஸ் மானியமும் வழங்கப்பட்டுள்ளது. புதிய பாராளுமன்றத்தில் வரலாற்று சிறப்புமிக்க நிறைவேற்றப்பட்ட மசோதாவில் மகளிர் மகளிர்க்கு இட ஒதுக்கீடு மசோதாவும் நிறைவேற்றப்பட்டுள்ளது. நான் நீலகிரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் நீலகிரியின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவேன், சுற்றுலா நகரமான உதகையை பிரதமர் இந்தியாவை மிகப்பெரிய சுற்றுலாப் பிரதேசமாக மாற்றி வருவதால் அதில் உதகையும் இடம்பெறும் என்றார். மேலும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான பார்க்கிங் மற்றும் குடிநீர் வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதாகவும் தெரிவித்தார்.


மேலும் படிக்க | பிரதமரின் 'நமோ ட்ரோன் திதி யோஜனா' திட்டத்தில் 1000 மகளிருக்கு இலவச ட்ரோன் பயிற்சி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ