நாடாளுமன்ற தேர்தல் தேதி நெருங்கி கொண்டு உள்ள நிலையில் ஒவ்வொரு கட்சியும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறது. காங்கிரஸ், திமுக, மதிமுக போன்ற கட்சிகள் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் தற்போது விடுதலை சிறுத்தை கட்சியும் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது.  சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் தொல் திருமாவளவன் இன்று ஜெயங்கொண்டாபுரம் பகுதியில் தேர்தல் அறிக்கையினை வெளியிட்டார். வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார் வாழ்த்துரை வழங்கினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | தமிழ்நாட்டில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் லீவு! தேதியை குறிச்சு வச்சுக்கோங்க


விசிக தேர்தல் அறிக்கையின் முக்கிய அறிவிப்புகள்


  • ஆளுநர் பதவி ஒழிப்பு

  • ஆளுநரை பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமிக்கக் கூடாது.

  • புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து

  • மாநிலங்களுக்கான உரிய நிதிப்பகிர்வு

  • அனைத்து மொழிகளிலும் அம்பேத்கர் நூல்கள்

  • அம்பேத்கர் பிறந்தநாளை அறிவுத்திருநாளாக அறிவிப்பு

  • ராமர் கோயில் கட்டுமானத்தில் ஊழல் குறித்த விசாரணை

  • கச்சத்தீவு மீட்பு 

  • ஊழல் ஒழிப்பு லோக்பால்

  • தேர்தல் தீர்த்திருத்தம்

  • ஒரே நாடு ஒரே தேர்த்ல் முறைக்கு எதிர்ப்பு

  • தேர்தல் ஆணையர் நியமண சட்டம் ரத்து

  • வாக்குபதிவு முறைக்கு பதிலாக பழையபடி வாக்குத் தாள் முறை

  • விகிதாச்சாரப் பிரதிநிதுத்துவம் 

  • தொகுதிமறுசீரமைப்பில் தென்னிந்திய மாநிலங்களுக்கு பாதுகாப்பு 

  • தேவையற்ற தேர்தல் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும்

  • இந்தி எதிர்ப்பு 

  • இந்திய மொழிகள் பல அமைச்சகம்

  • தேசிய இனங்கள் கவுன்சில் 

  • இந்திய மொழிகள் வளர்ச்சி ஆணையம்

  • இந்தியா முழுவதும் தமிழ்ச் செம்மொழி வாரக் கொண்டாட்டம் 

  • வறுமைக் கோட்டின் உச்சவரம்பினை உயர்த்துதல் 

  • 200 நாட்கள் வேலை வாய்ப்பு உறுதி சட்டம்

  • விவசாயம் மற்றும் நிலச்சீர்த்திருத்தம் 

  • விவசாயிகள் ஓய்வூதியத் திட்டம்

  • GST வரி ஒழிப்பு 

  • வருமான வரி சீரமைப்பு 

  • விவசாயக் கடன் ரத்து 

  • விவசாயத்திற்கு தனி பட்ஜெட் 

  • பெட்ரோலியப் பொருட்களின் மீது அரசின் விலைக் கட்டுப்பாடு

  • ராணுவத்தின் நிதியைக் குறைத்து கல்விக்கான நிதியை அதிகரிப்பு 

  • தனியார்மயதலை கைவிடல்

  • நீதித்துறையில் இட ஒதுக்கீடு 

  • தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு 

  • சாதிவாரி  மக்கள் கணக்கெடுப்பு 

  • உயர்சாதி இட ஒதுக்கீடு ரத்து 

  • அனைவருக்கும் வீடு அடிப்படை உரிமை 

  • மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறையே ஒழித்தல் 

  • இடுகாடு பணியில் இருந்து தலித்துகளை விடுவித்தல் 

  • மாநில சுயாட்சி 

  • சென்னையில் உச்சநீதிமன்ற கிளை 

  • மாநில அரசுகளின் வழியே உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் 

  • வழக்காடு மொழியாக தமிழ்

  • தமிழை இந்தியாவின் ஆட்சி மொழியாக்குதல் 

  • தமிழ்நாட்டிற்கென தனிக் கொடி 

  • கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுதல் 

  • கோதவரி- காவிரி இணைப்புத் திட்டம்

  • அணுமின் நிலையங்களை மூடுதல்

  • வேலி காத்தான் ஒழிப்பு

  • இந்தியாவின் இரண்டாவது தலைநகராக அறிவித்தல்

  • தமிழ்நாட்டின் பொருளாதார தலைநகராக தூத்துக்குடி

  • இட ஒதுக்கீடு பாதுகாப்பு

  • அமைச்சரவையிலும் மேலவைகளிலும் இட ஒதுக்கீடு 

  • ஆவணக் கொலை தடுக்க தனிச் சட்டம்

  • பழங்குடியினருக்கு தனிப்பட்டா

  • தலித் கிருத்தவர்களை பட்டியலில் இணைத்தல் 

  • பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு

  • மீனவர்களுக்கு தனி அமைச்சகம் 

  • மதச் சிறுபான்மையினருக்கு தனி அமைச்சகம்

  • மூன்றாம் பாலினத்தவர்களுக்கு பிரதிநிதித்துவம்

  • நீட் தேர்வு ரத்து


மேலும் படிக்க | கோவை: ’அண்ணாமலையின் பித்தலாட்டம்’ சொத்து மதிப்பை பட்டியல் போட்ட கார்த்திகேய சிவசேனாதிபதி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ