தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி தூய இருதய மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்த மாணவி லாவண்யா கடந்த சில நாட்களுக்கு முன்பு விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார். அந்த நேரத்தில் அவர் தற்கொலைக்கு முன்பு பேசியதாக ஒரு வீடியோ ஒன்று சமூகவலைதளத்தில் பரவியது. அந்த வீடியோவை குறிப்பிட்டு, மாணவி லாவண்யா மதமாற்றம் தொல்லை காரணமாக இறந்ததாக குற்றம்சாட்டப்பட்டு, அதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போர்க்குரல் எழுப்பப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | Proselytism: மாணவி லாவண்யா விவகாரத்தில் மதமாற்ற குற்றச்சாட்டை மறுக்கும் பள்ளி நிர்வாகம் 


இதனடிப்படையில் தமிழகம் முழுவதும் பா.ஜ.கவினர் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுத்தனர். மதம்மாற்ற பிரச்சனையால் உயிரிழந்த மாணவி லாவண்யாவுக்கு நீதி வேண்டும் எனக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.வினர், சமூகவலைதளங்களில் Justice For Lavanya என்ற ஹேஸ்டேக்கையும் இந்திய அளவில் டிரெண்ட் செய்தனர். சென்னையில் குஷ்பு மற்றும் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தலைமையில் மாணவி லாவண்யாவின் தற்கொலைக்கு நீதிகேட்டு மிகப்பெரிய போராட்டமும் நடத்தப்பட்டது.


இந்த போராட்டங்களின் விளைவாக பள்ளியின் வார்டன் சகாயமேரி கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், மாணவி லாவண்யா தற்கொலை விவகாரத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் மற்றொரு வீடியோ ஒன்று இப்போது வெளியாகியுள்ளது. மாணவி லாவண்யா பேசியதுபோல் இருக்கும் அந்த வீடியோவில் தற்கொலைக்கான காரணம் மதமாற்றம் இல்லை எனத் தெரியவந்துள்ளது. புதியதாக வெளியாகியிருக்கும் வீடியோவில், படிப்பில் முதல் ரேங்க் எடுப்பதாக தெரிவிக்கும் மாணவி லாவண்யா, வார்டன் கொடுக்கும் வேலையால் படிப்பில் முறையான கவனம் செலுத்த முடியவில்லை எனத் தெரிவித்துள்ளார்.


ALSO READ | பள்ளி சிறுமி தற்கொலை; கட்டாய மத மாற்றம் காரணமா? போலீஸ் விசாரணை!


இதனால் விஷமருந்தியதாக தெரிவிக்கும் அந்த மாணவி, தான் விஷமருந்தியது யாருக்கும் தெரியாது என்றும் விளக்கமளித்துள்ளார். மேலும், பள்ளியில் பொட்டு வைத்துக் கொள்வேன், அதனை வைத்துக் கொள்ள கூடாது என யாரும் கட்டாயப்படுத்தவில்லை என்பது உள்ளிட்ட தகவல்களையும் தெரிவித்துள்ளார். லாவண்யா தற்கொலை தொடர்பாக கடந்த சில நாட்களாக பரவி வந்த தகவல்களை முற்றிலும் புரட்டிபோடும் விதமாக இந்த வீடியோவில் இடம்பெற்றிருக்கும் தகவல்கள் அமைந்துள்ளன. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR