பேக்கரி உரிமையாளரை தாக்கிய சட்டக்கல்லூரி மாணவன் கைது
சென்னை மடிப்பாக்கத்தில் பேக்கரி கடை உரிமையாளரை சரமாரியாக தாக்கிய சட்டக்கல்லூரி மாணவன் கைதுசெய்யப்பட்டார்.
சென்னை மடிப்பாக்கத்தில் பேக்கரி கடை உரிமையாளரை சரமாரியாக தாக்கிய சட்டக்கல்லூரி மாணவன் கைதுசெய்யப்பட்டார். சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியை வைத்து மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை மடிப்பாக்கம் பொன்னியம்மன் கோயில் தெருவில் நியூ பாம்பே ஸ்சுவீட் ஸ்டால் கடை உள்ளது.
கடையின் உரிமையாளர் லோகேஷ் கான்(24) நேற்று முன்தினம் இரவு 10:15 மணியளவில் கடையை மூடும் நேரத்தில் இருவர் கடைக்கு வந்துள்ளனர்.
கடைக்கு வந்த இருவரும் க்லாப்ஜாமுன் எவ்வளவு என்று கேட்டதற்கு 100 ரூபாய் என உரிமையாளர் கூற, 'லோக்கலில் இருக்கும் எங்களுக்கே 100 ரூபாயா?' என கேட்டு அடித்துள்ளனர்.
மேலும் படிக்க | மனவளர்ச்சி குன்றிய மாணவியை அடித்து சூடு வைத்த ஆசிரியை!
பின்னர் கடை உரிமையாளரை கடைக்குள் தள்ளி இருவரும் உள்ளே சென்று உரிமையாளரின் கண்ணத்தில் பலார் பளார் பளார் என மாறி மாறி அடித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர் லோகேஷ் கான் கடையில் பாதுகாப்பிற்காக பொறுத்தியிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான தன்னை தாக்கும் காட்சியுடன் மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் ஆய்வாளர் சிவக்குமாரிடம் நேற்று நண்பகல் 12 மணியளவில் புகார் அளித்துள்ளார்.
புகார் அளித்த அடுத்த அரை மணி நேரத்தில் ஆய்வாளர் சிவக்குமார் உள்ளிட்ட போலீசார் பேக்கரி உரிமையாளரை தாக்கிய ஒருவரை கைது செய்தனர்.
பின்னர் அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்ததில், அவர் மடிப்பாக்கம் கன்னியம்மன் கோயில் தெருவை சேர்ந்த 28-வயதான பாலாஜி என்பதும் இவர் ஆந்தரா, அனந்தபூர் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு சட்டம் படித்து வருவதும் தெரியவந்துள்ளது.
பின்னர் பாலாஜி மீது 5 பிரிவீன் கீழ் வழக்கு பதிவு செய்த மடிப்பாக்கம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைமறைவாக உள்ள மதனை போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும் படிக்க | மாவட்ட ஆட்சியரின் பெயரில் மோசடி செய்யும் மர்ம கும்பல்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR