மனவளர்ச்சி குன்றிய மாணவியை அடித்து சூடு வைத்த ஆசிரியை!

சென்னை வியாசர்பாடியில் மனவளர்ச்சி குன்றிய மாணவியை அடித்து ஆசிரியை சூடு வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 18, 2022, 08:58 PM IST
  • மனநலம் குன்றிய 6 வயது மாணவியை தாக்கிய ஆசிரியை
  • கை, கால்களில் சூடு வைக்கப்பட்ட காயங்கள் இருந்ததால் அதிர்ச்சி
  • வழக்கு பதிவு செய்து போலீஸார் தீவிர விசாரணை
மனவளர்ச்சி குன்றிய மாணவியை அடித்து சூடு வைத்த ஆசிரியை! title=

சென்னை, வியாசர்பாடி, தாமோதரன் 1 வது தெரு பகுதியில் வசித்து வருபவர் திவ்யா. வயது 27. இவரது கணவர் 4 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்துவிட்டார். திவ்யாவுக்கு 10 வயதில் ஒரு மகனும் 6 வயதில் ஒரு மகளும் உள்ளனர். 

திவ்யாவின் 6 வயது மகள் பிறந்தது முதலே மனவளச்சி குன்றிய மாற்றுத்திறனாளியாவார். எனவே அவரை பெரம்பூரில் உள்ள ஸ்பெஷல் மாணவர்களுக்கான தனியார் பள்ளியில் கடந்த நான்காம் தேதி திவ்யா சேர்த்துள்ளார். அதன்படி சிறுமியின் தாத்தா கலைச்செல்வன் என்பவர் காலை 9.30 மணிக்கு சிறுமியை பள்ளியில் விட்டுவிட்டு மீண்டும் மதியம் 12.30 மணிக்கு வீட்டுக்கு அழைத்து வருவதை வழக்கமாக வைத்திருந்தார். 

இந்த நிலையில் நேற்று மதியம் சிறுமியை வீட்டுக்கு அழைத்து செல்ல வந்த கலைச்செல்வனை அழைத்த கவிதா எனும் ஆசிரியை, சிறுமியின் கை மற்றும் கால்களில் காயம் இருப்பதாக கூறினார். இவ்வளவு காயங்களுடன் சிறுமியை பள்ளிக்கு ஏன் அனுப்புகிறீர்கள் எனவும் ஆசிரியை கேள்வி எழுப்பியுள்ளார். 

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த கலைச்செல்வன் காலையில் வீட்டில் இருந்து வந்தபோது சிறுமி நலமுடன் இருந்ததாகவும் அவருக்கு எந்த காயங்களுடம் இல்லை என கூறினார். மேலும், இந்த காயங்கள் பள்ளியில் தான் ஏற்பட்டிருக்க வேண்டும் என ஆசிரியையிடம் கலைச்செல்வன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

மேலும் படிக்க | அடுத்தடுத்து முதல்வர்களுடன் சந்திப்பு. விஜய்யின் திட்டம் என்ன

பள்ளி முடிந்து வந்த சிறுமியை பரிசோதித்த போது அவரது வலது கணுக் கால், இடது கணுக்கால் மற்றும் வலது மணிக் கட்டில் சூடு வைக்கப்பட்ட தீக்காயங்கள் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த சிறுமியின் தாய் திவ்யா பள்ளிக்கு வந்து ஆசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் வகுப்பறையில் இருந்த கண்ணாடி ஜன்னல்களை ஆத்திரத்தில் அவர் தலையால் மோதி உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

பள்ளியில் வாக்குவாதம் நடப்பதை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுமியை மீட்டு பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் படிக்க | 'ஒரு பேட்டரி ஏற்படுத்திய பேரழிவு' - பேரறிவாளன் வழக்கு கடந்து வந்த பாதை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News