ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கிருஷ்ணன்கோவில், ராஜீவ் காலனியில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பாக காளீஸ்வரி என்பவர் தனது கணவருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 14 ஆம் தேதி வீட்டிற்குள் காளீஸ்வரி ரத்தக் காயத்துடன் இறந்து கிடப்பதாக அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து போலீசார் வந்து பார்த்தபோது பின் தலையில் காயம் ஏற்பட்டு வாயிலிருந்து ரத்தம் வழிந்து கழுத்துப் பகுதியில் நகக்கீறல்களுடன் கொடூரமாக இறந்து கிடந்தார். பின்னர் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து சந்தேக மரணம் என்ற கோணத்தில் வழக்குப் பதிவு செய்த போலீசார் கொலையா? தற்கொலையா? என கோணத்தில் விசாரணை செய்து வந்தனர்.
முதற்கட்ட விசாரணையில் சில தகவல்கள் கிடைக்க, சிவகாசி ஜமீன்சல்வார் பட்டியை சேர்ந்த லட்சுமணன் என்பவரை கைது செய்தனர். பின்னர் லட்சுமணன் கொடுத்த வாக்குமூலத்தில் உயிரிழந்த காளிஸ்வரிக்கு அவர் 3வது கணவர் எனவும், அவர் தனக்கு 2வது மனைவியின் என்பதும் தெரியவந்தது. திருமணம் செய்து ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் காளீஸ்வரி செல்போனில் மூழ்கியிருக்கிறார். ஆண் நண்பர்களுடன் பேசுவதையும் சேட்டிங்கில் ஈடுபடுவதையும் வழக்கமாக மாற்றியிருக்கிறார். இதனால் காளீஸ்வரிக்கும், லட்சுமணனுக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறார்.
மேலும் படிக்க | திண்டுக்கலில் கொள்ளை முயற்சி - அமெரிக்காவில் இருந்தபடியே விரட்டியடித்த வழக்கறிஞர்..!
சம்பவத்தன்று அதேதான் நிகழ்ந்தது. வாக்குவாதம் எல்லை மீறிப்போக ஆத்திரமடைந்த லட்சுமணன் காளீஸ்வரியை அடித்து கழுத்து நெறித்துத் துடிதுடிக்கக் கொலை செய்திருக்கிறார். பின்னர், தானும் தூக்கில் தொங்க கயிறு கட்டியதாகவும் பின்னர் ஏதோ ஒருவித அச்சத்தில் தூக்கில் தொங்காமல் ஓடிவிட்டதாகவும் தெரிவித்தார். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட லட்சுமணனை கிருஷ்ணன்கோவில் காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் படிக்க | ஓடும் ரயிலில் சிறுமியிடம் பாலியல் சீண்டல்! 65 வயது முதியவர் கைது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR