சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வரும் ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் மதுக்கடைகள் திறக்கப்படும்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை மதுக்கடைகள் செயல்படும். பல நாட்களாக மூடப்பட்டு இருந்த டாஸ்மாக் கடந்த மே மாதம் 7 ஆம் தேதி திறக்கப்பட்ட போது, உரிய கொரோனா தடுப்பு நடவடிக்கை பின்பற்றப்படாததால் 8 ஆம் தேதி டாஸ்மாக்கை மூடுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து, 45 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்ட டாஸ்மாக் இரண்டே நாட்களில் மூடப்பட்டது குடிமகன்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.


அதையடுத்து உச்சநீதிமன்றத்தில் டாஸ்மாக் திறப்பது தொடர்பாக தமிழக அரசு மேல்முறையீடு செய்த நிலையில், டாஸ்மாக்குக்கு எதிரான தடை நீக்கப்பட்டது. அதன் படி சில கட்டுப்பாடுகளுடன் தமிழகத்தில் எல்லா இடங்களிலும் டாஸ்மாக் திறக்கப்பட்டு விட்டன. ஆனால், கொரோனா வைரஸ் அதிகமாக இருக்கும் சென்னையில் டாஸ்மாக்கை திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை. இந்நிலையில், சென்னையில் டாஸ்மாக் மதுபான கடைகளை திறக்க முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. அதன்படி வரும் 18 ஆம் தேதி முதல் டாஸ்மாக் மதுக் கடைகள் திறக்கபடுகிறது. இதுதொடர்பாக வெளியான அறிக்கையில்; தமிழகத்தில் சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தவிர மதுபான சில்லறை விற்பனை கடைகள் 07.05.2020 முதல் திறந்திட தமிழக அரசு உத்தரவிட்டு மதுபான கடைகள் திறக்கப்பட்டது.


ALSO READ | விக்கிப்பீடியாவைப் போல தான் நித்தியானந்தப்பீடியா என்று அறைகூவும் நித்தியானந்தா....


சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திறக்கப்படாமல் இருந்த மதுபான சில்லறை விற்பனை கடைகள் 18.08.2020 முதல் இயங்கும். மேலும், மால்கள் மற்றும் நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருக்கும் மதுபானக்கடைகள் இயங்காது. மதுபான கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். நாளொன்றுக்கு ஒரு கடையில் 500 டோக்கன்கள் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும். மதுபான கடைகளுக்கு வரும் அனைவரும் முகக்கவசம் கண்டிப்பாக அணியவேண்டும் மற்றும் தனி மனித இடைவெளி கண்டிப்பாக கடைப்பிடித்தல் வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது குறித்து டாஸ்மாக் நிர்வாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தவிர மதுபான சில்லறை விற்பனை கடைகள் 07.05 முதல் திறந்திட தமிழக அரசு உத்தரவிட்டு மதுபானக் கடைகள் திறக்கப்பட்டது. சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திறக்கப்படாமல் இருந்த மதுபான சில்லறை விற்பனை கடைகள் 18.08.2020 முதல் இயங்கும். மேலும், மால்கள் மற்றும் நோய்க்கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருக்கும் மதுபானக் கடைகள் இயங்காது. மதுபான கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். நாளொன்றுக்கு ஒரு கடையில் 500 டோக்கன்கள் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும். மதுபான கடைகளுக்கு வரும் அனைவரும் முகக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் மற்றும் தனிமனித இடைவெளியை கண்டிப்பாக கடைபிடித்தல் வேண்டும்" என அதில் குறிப்பிடபட்டுள்ளது.