Vijayakanth Funeral Live: இளைப்பாருங்கள் வள்ளலே... கண்ணீர் கடலில் தமிழகம்... முடிந்தது சகாப்தம்
Captain Vijayakanth Funeral Live Updates: தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் நேற்று மறைந்தார். அவரது உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
Captain Vijayakanth Funeral Live Updates in Tamil: தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவரும், பிரபல நடிகருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று (டிச. 28) காலை உயிரிழந்தார். நுரையீரல் அழற்சி காரணமாக அவர் நேற்று காலை உயிரிழந்தாக மியாட் மருத்துவமனை விளக்கம் அளித்தது. தொடர்ந்து, அவர் நேற்று காலை 6.10 மணிக்கு உயிரிழந்ததாக தேமுதிக தலைமை உறுதிப்படுத்தியது.
அதை அடுத்து அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரின் வீட்டிற்கு எடுத்துச்செல்லப்பட்டு, அங்கிருந்து ஊர்வலமாக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. பிரபலங்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வருகை தந்த நிலையில், கூட்ட நெருக்கடியை கட்டுப்படுத்தும் விதமாக அவரது உடலை தீவுத்திடலுக்கு கொண்டுசெல்ல முடிவெடுக்கப்பட்டது.
அதன்பேரில் இன்று காலை அவரின் உடல் தீவுத்திடலுக்கு கொண்டுசெல்லப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. தொடர்ந்து, பல பிரபலங்களும், மக்கள் கூட்டமும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் மதியம் 3 மணியளவில் ஊர்வலமாக பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக எடுத்துவரப்பட்டு கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் மாலை 5.40 மணிக்கு கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து, அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
Latest Updates
Vijayakanth Funeral Live: பிரேமலதா நன்றி
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா நல்லடக்கத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்தார். அதில், தமிழ்நாடு அரசுக்கும், அமைச்சர்கள் உதயநிதி உள்ளிட்டோருக்கும், மாநகராட்சி செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார். மேலும், காவல்துறையினருக்கு ராயல் சல்யூட் அளிப்பதாக கூறினார். 15 லட்சம் பேர் கேப்டனுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளதாகவும் கூறினார். ராகுல் காந்தி தொலைப்பேசியில் தொடர்புகொண்டு இரங்கல் தெரிவித்தார். அவருடைய கையில் இருக்கும் மோதிரத்துடனே அவர் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளார் எனவும் கூறினார். மெரினாவில் சமாதி அமைக்கப்படும் என்றார்.
Vijayakanth Funeral Live: முதலமைச்சர் உருக்கம்
Vijayakanth Funeral Live: விடைபெற்றார் விஜயகாந்த்
கேப்டன் விஜயகாந்த் உடல் சந்தனப் பேழையில் வைத்து நல்லடக்கம் செய்யப்பட்டது. தொடர்ந்து, சந்தனப்பேழையின் மேல் மலர்த்தூவி இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
Vijayakanth Funeral Live: சந்தனப்பேழையில் துயில்கொண்டார் கேப்டன்
சென்னை கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலக்ததில் விஜயகாந்தின் உடல் அவரின் பெயர் பொறிக்கப்பட்ட சந்தனப்பேழையில் வைக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்படுகிறது.
Vijayakanth Funeral Live: டார்ச் அடித்து மக்கள் அஞ்சலி
விஜயகாந்தின் இறுதி சடங்கிற்கு பொதுமக்களுக்கு அனுமதியளிக்கப்படவில்லை என்றாலும் கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தைச் சுற்று நுற்றுக்கணக்கானோர் சூழ்ந்துகொண்டு, அவர் எல்இடி திரையில் ஒளிபரப்பப்பட்டு வரும் காட்சிகளை பார்த்துக்கொண்டு தங்கள் கேப்டனுக்கு பிரியாவிடை கொடுக்கின்றனர். மேலும், மொபைலில் டார்ச் அடித்தும் தங்களின் இரங்லை தெரிவிக்கின்றனர்.
Vijayakanth Funeral Live: கண்ணீர் விடும் உறவினர்கள்
விஜயகாந்த் உடலுக்கு இறுதிச் சடங்குகள் நிறைவுற்ற நிலையில் அவரது மனைவி, மகன்கள், உறவினர்கள், தொண்டர்கள் கண்ணீர்விட்டு தங்களின் துக்கத்தை வெளிப்படுத்தினர்.
Vijayakanth Funeral Live: இறுதி மரியாதை
தலைவர்கள் மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்திய பின்னர் விஜயகாந்தின் உடலுக்கு அரசு மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து, அவரது உடலுக்கு உறவினர்கள், நண்பர்கள் தங்களின் இறுதி மரியாதை செலுத்தினர். தற்போது இறுதிச்சடங்குகள் நடைபெறுகின்றன.
Vijayakanth Funeral Live: 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை
கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு 72 துப்பாக்கி குண்டுகள் வானத்தை நோக்கி முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது.
Vijayakanth Funeral Live: முதலமைச்சர் ஸ்டாலின் இறுதி மரியாதை
கோயம்பேடு தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்ட விஜயகாந்தின் உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இறுதி மரியாதை செலுத்தினார்.
Vijayakanth Funeral Live: தலைவர்கள் மரியாதை
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயகுமார், பெஞ்சமின், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தாமாக தலைவர் ஜி.கே. வாசன், தமிழ்நாடு அமைச்சர்கள் மா.சுப்ரமணியன், தா.மோ. அன்பரசன் ஆகியோர் தங்களின் இறுதி மரியாதையை செலுத்தினர்.
Vijayakanth Funeral Live: தொடங்கியது இறுதிச் சடங்கு
கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்தின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. அரசியல் தலைவர்கள், குடும்பத்தினர் தங்களன் இறுதி மரியாதையை செலுத்தி வருகின்றனர். விஜயகாந்தின் உடல் தற்போது சந்தனப்பேழையில் வைக்கப்பட்டுள்ளது.
Vijayakanth Funeral Live: கோயம்பேடு வந்தடைந்த விஜயகாந்த் உடல்
இறுதி ஊர்வலம் நிறைவுற்று, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்தின் உடல் கொண்டுவரப்பட்டது.
Vijayakanth Funeral Live: இறுதி ஊர்வலம் அப்டேட்
விஜயகாந்த் இறுதி ஊர்வலம் தற்போது அண்ணா ஆர்ச் பகுதியை கடந்து அரும்பாக்கம் பகுதியில் வந்துகொண்டிருக்கிறது. இன்னும் கோயம்பேடு அலுவலகத்திற்கு சுமார் 3.5 கி.மீ., தூரம் உள்ளது. தீவுத்திடலில் ஊர்வலம் சுமார் மதியம் 3 மணியளவில் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
Vijayakanth Funeral Live: 8 LED திரைகள் அமைப்பு?
விஜயகாந்த் உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ள நிலையில், அவரது இறுதி சடங்கிற்கு பொதுமக்களுக்கு அனுமதியில்லை. எனவே, அவர் நேரலையில் பார்ப்பதற்காக 8 எல்இடி திரைகள் கோயம்பேட்டில் அமைக்கப்பட்டுள்ளது.
Vijayakanth Funeral Live: கோயம்பேட்டில் தலைவர்கள்
கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்தின் உடல் அடக்கம் செய்யப்பட உள்ள நிலையில், அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்க தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயகுமார், பெஞ்சமின், சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தார் உள்ளிட்ட பலரும் வருகை தந்துள்ளனர். முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது.
Vijayakanth Funeral Live: வடிவேலுக்கு விஜயகாந்திற்கும் என்ன பிரச்னை?
"2011ஆம் அண்டு சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தின் போது விஜயகாந்தை கடுமையாக தாக்கி பேசினார், வடிவேலு. ஒற்றுமையாக இருந்த இவர்களுக்குள் ஏற்பட்ட சிறிய மனஸ்தாபம், திமுகவினரால் உபயோகப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது".
இதன் முழு தகவல்களையும் படிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்.
Vijayakanth Funeral Live: எங்கே உள்ளது விஜயகாந்த் இறுதி ஊர்வலம்?
விஜயகாந்த் இறுதி ஊர்வலம் தற்போது எழும்பூர் வேப்பரி பகுதியை கடந்துள்ளது. கோயம்பேட்டுக்கு இன்னும் 8 கி.மீ., தூரம் உள்ளது.
Vijayakanth Funeral Live: ஸ்தம்பித்த சென்னை
தீவுத்திடலில் இருந்து கோயம்பேடு நோக்கி விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் சென்றுகொண்டிருக்கும் நிலையில், சென்னையின் முக்கிய சாலைகள் ஸ்தம்பித்து உள்ளன எனலாம்.
Vijayakanth Funeral Live: டிசம்பர் என்றாலே டேஞ்சர்தான்... விஜயகாந்தின் வைரல் வீடியோ
Vijayakanth Funeral Live: கோயம்பேட்டில் குவிந்துள்ள மக்கள்
கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ள நிலையில், அங்கு ஆயிரக்கணக்கானோர் காத்திருக்கின்றனர். இருப்பினும், பொதுமக்களுக்கு இறுதிசடங்கில் அனுமதியில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடும்ப உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள் மட்டுமே பங்கேற்கும் நிலையில், அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுவிட்டன. கோயம்பேட்டியில் பெரிய எல்இடி திரை அமைத்து, இறுதி சடங்கை நேரலையாக ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
Vijayakanth Funeral Live: 72 குண்டுகள் முழங்க நல்லடக்கம்...
விஜயகாந்தின் உடல் இன்று மாலை முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. இதில் 24 துப்பாக்கிகள், மூன்று சுற்றுகள் என மொத்தம் 72 குண்டுகள் முழு அவரது உடல் சந்தனப்பேழையில் வைக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
Vijayakanth Funeral Live: தொண்டர்களுக்கு பிரேமலதா வேண்டுகோள்
விஜயகாந்த் உடல் எடுத்துச்செல்லப்படும் வாகனத்தில் இருக்கும் பிரேமலதா ஒலிபெருக்கி மூலம், வாகனம் செல்ல வழிவிடும்படி சூழ்ந்திருக்கும் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
Vijayakanth Funeral Live: கேப்டன் கேப்டன்... என்ற கர்ஜனை
விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் நடைபெற்று வரும் நிலையில், வழிநெடுக கூடவே வரும் மக்கள் அவரது உடலுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்துகின்றனர். கேப்டன், கேப்டன்... என்ற மக்களின் கர்ஜனையுடன் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் நடைபெற்று வருகிறது. தற்போது ராஜீவ் காந்தி மருத்துவமனையை கடந்த இறுதி ஊர்வலம் நடைபெற்று வருகிறது.
விஜயகாந்தின் இறுதி சடங்கு எல்.இ.டி திரையில் ஒளிபரப்பு!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் இறுதி சடங்கை தேமுதிக தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் காணும் வகையில் எல் இ டி துறை அமைக்கும் பணியில் சென்னை மாநகர காவல் துறையினர் இறங்கியுள்ளனர்.
Vijayakanth Funeral Live: சந்தன பேழையில் இடம்பெற்ற வாசகங்கள்
விஜயகாந்தின் உடல் வைக்கப்பட உள்ள சந்தன பேழையில் 'புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த்' என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தேமுதிக நிறுவனத் தலைவர் என்றும் அவரின் பிறந்த தேதி மற்றும் இறந்த தேதி உள்ளிட்டவையும் இடம்பெற்றுள்ளது. பிரத்யேக சந்தன மரத்தால் 50 கி.மீ., எடையில் இந்த சந்தன பேழை உருவாக்கப்பட்டுள்ளது. உடல் எடுத்துச்செல்லப்படும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் விஜயகாந்தின் மனைவியும் தேமுதிக பொதுச்செயலாளருமான பிரேமலதா, மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் மற்றும் தேமுதிக முக்கிய பிரமுகர்கள் உள்ளனர்.
Vijayakanth Funeral Live: 12 கி.மீ., இறுதி பயணம்... வழிநெடுக மக்கள்
தீவுத்திடலில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்தின் உடல் கோயம்பேடு தேமுதிகவின் தலைமை அலுவலகத்திற்கு எடுத்துச்செல்லப்படுகிறது. சுமார் 12 கி.மீ., தூரத்திற்கு நடைபெறும் இந்த இறுதி ஊர்வலம், சென்ட்ரல் ரயில் நிலையம், ரிப்பன் மாளிகை, சேத்துபட்டு, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி, ஸ்கைவாக் மால் வழியாக கோயம்பேடு எடுத்துச்செல்லப்படுகிறது. வழிநெடுக மக்கள் கூட்டம் அதிகமிருப்பதால் 3,500க்கும் மேலான போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். கோயம்பேடு வருவதற்கு சுமார் 2-3 மணிநேரம் ஆகலாம் எனவும் கூறப்படுகிறது.
Vijayakanth Funeral Live: வாகனத்தில் ஏற்றப்பட்டது விஜயகாந்தின் உடல்
தீவுத்திடலில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்தின் உடல் இறுதி ஊர்வலம் செல்லும் வாகனத்தில் ஏற்றி வைக்கப்பட்டது. இன்னும் சில நேரத்தில் ஊர்வலம் தொடங்கப்பட உள்ளது.
Vijayakanth Funeral Live: ஆளுநர் அஞ்சலி
தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்தின் உடலுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி நேரில் அஞ்சலி செலுத்தினார். இன்னும் சற்று நேரத்தில் இறுதி ஊர்வலம் தொடங்க உள்ளது.
Vijayakanth Funeral Live: இறுதி அஞ்சலி ஏன் தாமதம்?
ஆளுநர் ஆர்.என். ரவி தீவுத்திடலில் உள்ள விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த இருக்கிறார். என்றும் இதனால் இறுதி ஊர்வலம் தொடங்க தாமதமாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
Vijayakanth Funeral Live: விஜயகாந்த் இறுதி சடங்கு - நான்கு வண்ணங்களில் பாஸ்!
தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் இன்று மாலை அரசு மரியாதை உடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. இறுதி சடங்கிற்கு பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. மேலும், குடும்ப உறுப்பினர்கள், தேமுதிக பிரமுகர்கள், முக்கிய பிரபலங்கள் என 200 பேருக்கு மட்டும் நான்கு வண்ணங்களில் அனுமதி பாஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும், பாஸ் உள்ளவர்களுக்கு மட்டுமே இறுதிச் சடங்கில் அனுமதி எனவும் ஒலிபெருக்கி அறிவித்து வருகின்றனர்.
Vijayakanth Funeral Live: கோயம்பேட்டில் லேசான தடியடி
கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அனுமதிக்குமாறு மக்கள் மறியலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து தொண்டர்கள் நூற்றுக்கணக்கில் அங்கு குவிந்துள்ளனர். எனவே, கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் அங்கு லேசான தடியடி நடத்தப்பட்டது.
Vijayakanth Funeral Live: அஜித் மெசேஜ் மூலம் இரங்கல்
விஜயகாந்தின் மறைவுக்கு அவரது மனைவி பிரேமலதாவின் மொபைலில் மெசேஜ் மூலம் நடிகர் அஜித் குமார் அஞ்சலி தெரிவித்ததாக கூறப்படுகிறது. விடாமுயற்சி படப்பிடிப்பிற்காக அஜர்பைஜான் நாட்டில் இருப்பதால் மொபைல் மெசேஜ் மூலம் இரங்கல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
Vijayakanth Funeral Live: உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி
தீவுத்திடலில் வைக்கப்பட்ட விஜயகாந்தின் உடலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். மேலும், இறுதி ஊர்வலத்திற்கான ஏற்பாடுகளையும் நேரில் ஆய்வு செய்தார்.
Vijayakanth Funeral Live: விஜய் மீது தாக்குதலா?
கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்தின் உடலுக்கு நேற்றிரவு நடிகர் விஜய் அஞ்சலி செலுத்தினார். அப்போது அஞ்சலி செலுத்திய பின்னர் அவர் மீது காலணி தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அதுசார்ந்த வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது.
Vijayakanth Funeral Live: பொதுமக்களுக்கு அனுமதி இல்லை
கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்தின் உடல் இன்று முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுகிறது. அவரது இறுதி சடங்கிற்கு பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள் உள்பட 200 பேருக்கு மட்டும் அனுமதி என தெரிவிக்கப்பட்டுள்ளது. தீவுத்திடலில் இருந்து ஈ.வெ.ரா. பெரியார் சாலை வழியாக கோயம்பேட்டிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
Vijayakanth Funeral Live: விஜயகாந்த் இறுதி சடங்கில் அமைச்சர்கள்
கோயம்பேட்டில் நடைபெறும் விஜயகாந்த் இறுதி சடங்கில் அரசு சார்பில் அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன் மற்றும் தாமோ அன்பரசன் இருப்பார்கள் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
Vijayakanth Funeral Live: விஜயகாந்தின் வாழ்வு பெருவாழ்வு
தீவுத்திடலில் உள்ள விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் நடிகர் ராம்கி செய்தியாளர்களை சந்தித்தார். அதில்,"நடிகர்கள் சங்க கட்டடத்துக்கு விஜயகாந்தின் பெயர் சூட்ட வேண்டும். அவரது வாழ்வு பெருவாழ்வு" என்றார்.
Vijayakanth Funeral Live: குழி தோண்டும் பணிகள் தொடக்கம்
கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் இன்று மாலை 4.45 மணிக்கு உடல் நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது. தற்போது, அங்கு குழி தோண்டும் பணிகள் தொடங்கியது.
Vijayakanth Funeral Live: விஜயகாந்த் இறுதி ஊர்வலம்... இன்னும் சற்று நேரத்தில்...
தீவுத்திடலில் இருந்து கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலத்திற்கு விஜயகாந்தின் உடல் இன்னும் சற்று நேரத்தில் எடுத்துச்செல்லப்படுகிறது. அதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் பிரேமலதா உடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
Vijayakanth Funeral Live: விஜயகாந்த் அடக்கம் செய்யப்பட உள்ள இடம்
Vijayakanth Funeral Live: நல்ல நண்பருக்கு விடைக்கூறி செல்கிறேன் - கமல்
விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்திய பின்னர் பேசிய கமல்ஹாசன்,"நட்சத்திர அந்தஸ்து இல்லாதபோது எப்படி பழகினோரோ, பெரிய நட்சத்திரமான பின்னரும் அப்படிதான் பழகினார். எந்தளவு பணிவு இருந்ததோ அந்தளவிற்கு நியாயமான கோபமும் அவரிடம் இருந்தது. விஜயகாந்த் கோபத்தின் ரசிகன் நான். அதனால்தான் அவர் அரசியலுக்கு வந்தார். எளிமை, நட்பு, பெருந்தன்மை ஆகிய வார்த்தைகள் விஜயகாந்திற்கு மட்டும்தான் சொல்ல முடியும். இப்படிப்பட்ட நேர்மையானவர்களை இழந்தது என் போன்றவர்களுக்கு தனிமைதான். நல்ல நண்பருக்கு விடைக்கூறி செல்கிறேன்" என்றார்.Vijayakanth Funeral Live: கமல்ஹாசன் அஞ்சலி
தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்தின் உடலுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தற்போது நேரில் அஞ்சலி செலுத்தினார்.
Vijayakanth Funeral Live: அண்ணாமலை பேட்டி
தீவுத்திடலில் விஜயகாந்தின் உடலுக்கு ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அஞ்சலி செலுத்திய நிலையில், அண்ணாமலையுடன் அவருடன் இருந்தார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை,"ஏழைப் பங்காளன் விஜயகாந்த். பிரதமர் மோடி நிதயமைச்சர் நிர்மலா சீதாராமனை அனுப்பிவைத்து தனது இரங்கலைப் பதிவு செய்துள்ளார்" என்றார்.
Vijayakanth Funeral Live: நிர்மலா சீதாராமன் நேரில் அஞ்சலி
தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்தின் உடலுக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தற்போது அஞ்சலி செலுத்தினார்.
Vijayakanth Funeral Live: அஞ்சலி செலுத்த வருவோருக்கு காவல்துறை
அஞ்சலி செலுத்த வருவோருக்காக சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை முக்கியமான சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அனைத்து விஐபி மற்றும் விவிஐபிக்களின் வாகனங்கள், காமராஜர் சாலை, நேப்பியர் பாலம், போர் நினைவு சின்னம், கொடி பணியாளர் சாலை வழியாக அண்ணா சாலைக்கு தீவுத்திடலின் இடது நுழைவு வழியாக செல்லலாம்.
மற்ற மூத்த திரைக்கலைஞர்களின் வாகனங்கள் பல்லவன் சந்திப்பு, வாலாஜா ரோடு வழியாக கொடி பணியாளர் சாலையை அடைந்து தீவுத்திடலை அடையலாம். தீவுத்திடல் சாலையில் போக்குவரத்து அதிகமாக இருக்கும் என்பதால் வேறு சாலையை பயன்படுத்துமாறு வாகன ஓட்டிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.Vijayakanth Funeral Live: சென்னை மாமன்றம் தீர்மானம் நிறைவேற்றம்
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் உடலை கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலக வளாகத்தில் அடக்கம் செய்ய சென்னை மாநகராட்சி மன்றத்தில் இன்று அனுமதி வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விஜயகாந்த் மற்றும் அவரது குடும்பத்தின் விருப்பத்தின் பேரில் விஜயகாந்தின் உடல் அங்கு அடக்கம் செய்யப்படுகிறது.
Vijayakanth Funeral Live: சீமான் நேரில் அஞ்சலி
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தீவுத்திடலில் வைக்கப்டப்டுள்ள விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பாடகர் மனோவும் நேரில் அஞ்சலி செலுத்தினார். விஜயகாந்திற்காக பாட்டு பாடி மனோ அஞ்சலி செலுத்தினார்.
Vijayakanth Funeral Live: ரஜினி நேரில் அஞ்சலி
நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை 10.30 மணியளவில் தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்தின் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,"நட்புக்கு இலக்கணமே விஜயகாந்த்தான்" என்று கூறி அவரது அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.