TN Lok Sabha Elections Voter ID Card : 18வது மக்களவை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 102 தொகுதிகளில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் 39 மக்களவை தொகுதிகளிலும், கன்னியாகுமரியில் விளவங்கோடு தொகுதியிலும் இன்று தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆளும் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி, எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி மற்றும் அதிமுகவின் கூட்டணி என மும்முனை போட்டி தமிழ்நாட்டில் நிலவுகிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளில் கடும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு இயந்திரங்கள் பொருத்தும் பணிகள் நேற்று நிறைவடைந்த நிலையில், வாக்காளர்கள் எவ்வித தொந்தரவும் இன்றி வாக்குச் செலுத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.


இந்த தேர்தலில் வாக்கு அளிக்க செல்லும் பகுதியில் வாக்காளர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை உங்களிடம் இல்லையென்றாலும் நீங்கள் வாக்களிக்க முடியும் என்று தேர்தல் ஆணையம் உறுதி படுத்தி உள்ளது. அதன்படி வாக்காளர் அடையாள அட்டை இல்லாத பட்சத்தில் என்ன செய்வது? இதற்கான மாற்று ஆவணங்கள் என்ன? தேர்தல் ஆணையம் இதற்காக வகுத்துள்ள விதிகள் என்ன? இதை பற்றி இங்கே காணலாம். 


மேலும் படிக்க | Lok Sabha election 2024: நீங்கள் வெளியூரில் வசிக்கிறீர்கள் என்றால் வாக்களிப்பது எப்படி?


எனவே உங்களது பெயர் வாக்களர் பட்டியலில் இருந்து EPIC அல்லது வாக்காளர் அடையாள அட்டை இல்லை என்றால் இணக்கென கொடுக்கப்பட்டுள்ள ஆவணங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.


* பாஸ்போர்ட்
* ஆதார் அட்டை
* பான் கார்டு
* ஓட்டுநர் உரிமம்
* மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட அட்டை
* மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களின் அடையாள அட்டைகள் மற்றும் புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய அட்டைகள்
* MNREGA வேலை அட்டை
* வங்கி அல்லது அஞ்சல் அலுவலகத்தால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பாஸ்புக்குகள்
* தொழிலாளர் அமைச்சகத்தின் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சுகாதார காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு
* ஓட்டுனர் உரிமம்
* NPR இன் கீழ் RGI வழங்கிய ஸ்மார்ட் கார்டு
* மத்திய அல்லது மாநில அரசின் அடையாள அட்டை
* பொதுத்துறை நிறுவனம் அல்லது பொது நிறுவனத்தால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை
* மத்திய அரசின் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சுகாதார காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு
* எம்.பி.-எம்.எல்.ஏ மற்றும் எம்.எல்.சி.க்கு வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ அடையாள அட்டை
* இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் வழங்கப்பட்ட தனிப்பட்ட ஊனமுற்றோர் அடையாள அட்டை அட்டை (UDID) 
* புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்.


மக்களவை தொகுதிகள் எண்ணிக்கை:
அருணாச்சல பிரதேசம் (2)
அசாம் (5)
பீகார் (4)
சத்தீஸ்கர் (1)
மத்திய பிரதேசம் (6)
மகாராஷ்டிரா (5)
மணிப்பூர் (2)
மேகலா (2)
மிசோரம் (1)
நாகாலாந்து (1)
ராஜஸ்தான் (12)
சிக்கிம் (1)
தமிழ்நாடு (39)
திரிபுரா (1)
உத்தரப் பிரதேசம் (8)
உத்தரகாண்ட் (5)
மேற்கு வங்கம் (3)
அந்தமான் நிக்கோபார் தீவுகள் (1)
ஜம்மு மற்றும் காஷ்மீர் (1)
லட்சத்தீவு (1)
புதுச்சேரி (1)


இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் 2024:
543 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் இன்று தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது, மலேஉமி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4 ஆம் தேதி நடைபெறும். இதில் முதல் கட்ட தேர்தல் இன்றும், இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26 ஆம் தேதியும், மூன்றாம் கட்ட தேர்தல் மே 7 ஆம் தேதியும், நான்காம் கட்ட தேர்தல் மே 13 ஆம் தேதியும், ஐந்தாம் கட்ட தேர்தல் மே 20 ஆம் தேதியும், ஆறாம் கட்ட தேர்தல் மே 25 ஆம் தேதியும், இறுதி கட்ட தேர்தல் ஜூன் 1 ஆம் தேதியும் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | உங்களிடம் வோட்டர் ஐடி இல்லையா? அப்போ வாக்களிப்பது எப்படி? உடனே தெரிந்துக்கொள்ளுங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ