கோவையை அடுத்த பூண்டி மலை பகுதியில் அமைந்துள்ள  வெள்ளியங்கிரி ஆண்டவர்  திருக்கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற காவடி எடுத்தபடி ஊர்வலமாக செல்வது வழக்கம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இவ்வாறு  கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டுவரும் வெள்ளியங்கிரி ஆண்டவர் காவடி பக்தர்கள் குழுவின் அன்னதான கமிட்டியாரின் நூற்றாண்டு விழா அதன் தலைவர் ரவி தலைமையில்  நடந்தது. விளாங்குருச்சி பகுதியில் கடந்த 10 தினங்களாக நாட்டுப்புற கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக ஒயிலாட்டம், தப்பாட்டம், கரகாட்டம் என பல்வேறு விதமான  நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.



நிறைவு விழாவான இன்று வான வேடிக்கையுடன் சிவாத்தியம்,ஜாமப் இசைகள் முழங்க காளைகள் மற்றும் குதிரைகள் அணிவகுத்து நடனமாடியபடி சிவன் பார்வதி தேர் திருவீதி உலா நடைபெற்றது.


மேலும் படிக்க | ராஜா என்றும் இளையராஜா - களம் இறங்கிய தமிழ்நாடு பாஜக


பக்தர்கள் வடம் பிடித்து இழுத்த தேர் முன் காவடி எடுத்தபடி நடனமாடியது பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. இந்த விழாவில் ஏராளமானோர் பக்தர்கள் கலந்துகொண்டனர்.


மேலும் படிக்க | மிஸ்டு கால் மூலம் எஸ்பிஐ அக்கவுண்ட் பேலன்ஸ் செக் செய்வது எப்படி


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!